பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


வாலிபத் திமிர்களை அடங்குவதற்காக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது - கிழக்கு இந்திய கம்பெனி என்ற வணிக நிறுவனம்!

இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட அந்த வாலிபனான இராபர்ட் கிளைவ், தமிழ்நாட்டில் இருந்த கிழக்கு இந்திய கம்பெனியின் வணிகக் கிளைக் குழுவில் பணியாற்றினான். அவன் அதிகாரத்தில் ஒரு இராணுவப் படையும் இருந்தது.

இராபர்ட் கிளைவ் என்ற அந்த குறும்பன் தான், இந்தியாவில் சூரியன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தை The Never Sun Set in British Empire-ஐ தோற்றுவித்தான். அந்தக் குறும்புத்தனமானவன்தான் வரலாற்றில் தனக்கென ஒரிடத்தை உருவாக்கிக் கொண்ட வரலாற்று மாவீரனான்: அவனால் இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசு உருவாகி - நிலையாக நிறுத்தப்பட்டது.

அந்த சரித்திர நாயகனைப் போலவே, தமிழ்நாட்டில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் ‘கலங்கல்’ என்ற ஒர் ஊரில் கோபால்சாமி என்பவருடைய மகனாக ஜி. துரைசாமி பிறந்து வளர்ந்தார்.

அவருக்குக் கலங்கல் கிராமத்தில் ஒரு வீடும், தோட்டமும், சிறிது புன்செய் நிலமும் இருந்தது. அதனால் கோபால்சாமி அந்த ஊர் போற்றும் ஒரு வேளாண் குடிமகனாக பெயரும் புகழும் பெற்று வாழ்ந்து வந்தார்.

கோபால்சாமி, விவசாயியாக மட்டுமல்லாமல், தனது தோட்டத்திலே பஞ்சும், புகையிலையும், பயிர் செய்து வந்ததால், ஒரளவு அவர் தனது மனைவியுடன் செல்வாக்கோடு வாழ்ந்த வந்தபோது, 23.3.1893-ஆம் ஆண்டில் அவருக்குப் புதல்வனாகப் பிறந்தவர்தான் நாம் முன்பு குறிப்பிட்ட அந்த ஆண் குழந்தையான ஜி. துரைசாமி என்ற குழந்தை.

பிள்ளைப் பருவமும் :
கல்வி நிலையும்!

குழந்தை பிறந்த ஓராண்டுக் குள்ளாகவே, கோபால்சாமி தனது வாழ்க்கைத் துணை நலமாக வாழ்ந்து வந்த அருமை மனைவியை இழந்தார். அதனால், துரைசாமி குழந்தையாக இருந்தபோதே தாயைப் பறிக் கொடுத்து விட்டார் என்ற