பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

23


ஒரு நாள் கலங்கல் கிராமத்து மணியக்காரர் அவசரமாக வெளியூர் செல்லும் நேரம் வந்ததால், தான் திரும்பி வரும் வரையில், கிராம மணியம் பணியை துரைசாமி கவனித்து வருவார் என்று மேலதிகாரிகளுக்கு எழுதி வைத்து விட்டுப் போனார். துரைசாமியும் அதற்குச் சம்மதித்துக் கொண்டார். அதனால், மணியம் வேலையை ஒழுங்காகச் செய்து வந்தார்.

மணியக்காரர் செய்த எருமை சவாரி!

வட்ட ஆட்சியர், வருவாய் துறை அதிகாரி, அவர்களுக்குப் பணிபுரிய வரும் அலுவலகப் பணியாள் ஆகியோர், கலங்கல் கிராமத்தை நேர்முகமாகப் பார்வையிட, அரசு பணிகள் விவரம் அறிய - அந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார்கள்.

துரைசாமி தனது தோட்ட வீட்டிலே இருந்து எருமை மீது சவாரி செய்து கொண்டு, ஊர் புறம் வீட்டுக்கு வருவதும், எருமையின் பாலைக் கறந்து குடித்து விட்டு பிறகு வழக்கம் போல அதே எருமை மீதே சவாரி செய்து கொண்டு தோட்ட வீட்டுக்குப் போவதும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஊர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு அதிகாரிகள் மணியக்காரர் வீட்டருகே வந்து அவரை அழைத்து வருமாறு ஊர் பெரியவர்களிடம் கேட்டனர். அதற்கேற்ப ஆட்கள் ஓடோடி துரைசாமியை அழைத்து வந்தார்கள்.

உடனே தாசில்தார் ரெவின்யூ அதிகாரியைப் பார்த்து, இந்த ஆள் எருமைமேலே சவாரி செய்து கொண்டிருந்த ஆளல்லவா? என்று கேட்டார். அவரும் ‘ஆம்’ என்று பதில் கூறவே, ‘எருமை மாட்டு மீது சவாரி செய்பவனா இந்த ஊர் மணியக்காரன்?’ என்று வியப்போடு அவர்கள் துரைசாமியையே பார்த்து நின்றார்கள்.

ஆனால், துரைசாமி தனது எருமைச் சவாரியைப் பற்றி அதிகாரிகளிடம் பெருமையாகப் புகழ்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.

இதைக் கேட்ட அதிகாரிகள் அந்த இளைஞனுடைய விளையாட்டுத் தனத்தைப் பொருட்படுத்தாமல் திரும்பினார்கள்.

துரைசாமி ஒரு நாள் தனது நண்பர் ஒருவனைத் துரத்திக் கொண்டே ஓடினார். ஓடிய வேகத்தில் அந்த நண்பருடைய வீட்டில்