பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


தொங்கிக் கொண்டிருந்த இரும்புச் சங்கிலி ஒன்றில் சிக்கிக் கொண்டார். துரைசாமியின் கால்கள் சங்கிலித் தொடரில் பின்னிக் கொண்டன. விடுபட முடியாமல் திணறினார்; தவித்தார். அந்த நண்பனையே தன்னை விடுவிக்குமாறு துரைசாமி வேண்டினார்.

அதற்கு அந்த நண்பன் இரண்டு விதிகள் துரைசாமிக்கு விதித்தான். அதற்குச் சம்மதித்தால் அவன் விடுவிப்பதாகக் கூறினான். அவரும் அதற்கு ஒப்புக் கொண்டார். என்ன அந்த இரண்டு விதிகள்?

“இரண்டாண்டுகள் நீ என்னைத் துன்புறுத்தக் கூடாது. மற்றொன்று, நான் உன்னைத் துன்புறுத்தினால் நீ என்னைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். என்ன சம்மதமா?” என்று கூறியவனுக்கு, துரைசாமி ‘சரி’ என்று கூறவே, அந்த நண்பன் அவனை விடுவித்தான்.

அவர்களுக்குள் என்ன துன்பமோ, என்ன விவகாரமோ, அதை அவர்கள் இருவருமே ஒருவருக்கு ஒருவர் இன்னதென்று கூறிக் கொள்ளவில்லை. இருந்தாலும், அவர்களது ஒப்பந்தம் இரண்டாண்டுகள் நீடித்தது. அதனால், துரைசாமி அந்த நண்பனுக்கு அடங்கியே நடந்து கொண்டார்.

பட்டம் விடுவதற்கு !
தங்கக் கம்பி நூல்!

துரைசாமியின் நண்பர்கள் கோடைக் காலப்பொழுது போக்குக்காக காற்றாடி விடுகின்ற பழக்கம் உடையவர்கள், அவ்வாறு ஒரு நாள் அவர்கள் பட்டம் விடும் வழக்கத்தைத் துரைசாமி பார்த்தார். தனக்கும் அதுபோல காற்றாடி பறக்கவிட வேண்டும் என்ற ஆசை எழுந்தது. ஆனால், அவரிடம் பட்டம் இல்லை. என்ன செய்வது என்று சிந்தித்தார்

அப்பொழுது அக் கூட்டத்தில் இருந்த ஒரு சிறுவனிடம் பட்டம் இருப்பதை துரைசாமி பார்த்தார். அவனிடம் சென்று பட்டத்தைக் கேட்டுப் பெற்றார். நூலுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, பக்கத்தில் தட்டான் ஒருவன் தங்க ஆபரணம் செய்வதற்காக தங்கத்தை கம்பிபோல நீட்டி இழுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டார்.