பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


வண்டியையோ பார்த்ததில்லை, நகரம் என்றால், அது எப்படி எல்லாம் இருக்கும் என்று அவர் கனவு கூட கண்டதில்லை. அத்தகைய மனிதரான துரைசாமி யாருக்கும் தெரியாமல், கோவை நகருக்குப் புறப்பட்டு ஏறக்குறைய பதினாறு கல் தூரம் கால் நடையாகவே நடந்து சென்றார்.

கோவை நகர் சென்றதும் - அவர். பார்த்த முதல் அதிசயம் புகைவண்டி ரயில்தான். அதன் தோற்றம், ஓடும் விநோதம், சக்கரங்கள் அமைப்பு, விரைவான வேகம், அதன் ஊது குழலோசை, நிலக்கரி நெருப்பால் எரியும் சக்தி, அது கக்கும் புகை, ஓடும்போது எழும் ஒலி ஆகியவற்றை எல்லாம் அன்று நேரிடையாகவே பார்த்து திகைப்பும். ஒரு வித மன மயக்கும் கொண்டு அப்படியே அசந்து துரைசாமி மலை போல நின்று விட்டார்.

கோவை நகரிலே உள்ள அழகிய கட்டடங்கள் அமைப்புகளும் வீதிகளில் எரிந்து கொண்டிருக்கும் மின்சார விளக்குகளும், துரைசாமிக்கு ஒரு வித மனக் கிளர்ச்சியை ஊட்டின. கோவை நகர் மக்களின் கில் துணி ஆலை வேலைகளது சுறு சுறுப்புகள், நகரப் போக்கு வரத்துகளின் எழுச்சி வேகங்கள், கார்கள், பேருந்துகள், சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்கள், குதிரை வண்டிகள் ஆகியனவற்றின் போக்கு வரத்துக்களின் ஓசைகள் துரைசாமி அறிவுக்கு எழுச்சியையும், புத்துணர்ச்சியையும் அவர் நெஞ்சில் புகுத்தின. இந்தக் காட்சிகளைக் கண்ட துரைசாமி, ஏதேதோ எண்ணியபடியே சாலைகளில் நடந்து கொண்டிருந்தார்.

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பதற்கேற்ப, நடை தளர்ந்தார். எதையெதையோ சிந்தித்துக் கொண்டு வந்த எண்ணங்கள் எல்லாம் பறந்தோடி விட்டன. வயிற்றைப் பசி நெருப்பு எரிக்க ஆரம்பித்தது. கையிலோ காலனா இல்லை-பாவம் அருகே உள்ள ஒர் உணவு விடுதிக்குள் புகுந்து ஏதாவது ஒரு வேலை கொடுங்கள் என்று, வாலிபனான அவன் தனது கூச்சத்தையும் விட்டு விட்டுக் கேட்டான்.

உணவு விடுதியின் :
வேலையில் சேர்ந்தார்

மாதம் மூன்று ரூபாய் சம்பளம்! என்று பேசிக் கொண்டு அந்த ஒட்டலில் வேலைக்குச் சேர்ந்ததால் துரைசாமி தனது பசியைப்