பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4. பேருந்து தொழிலில் கூட்டுறவு!
U.M.S. நிறுவி வெற்றி கண்டார்!

ஒன்னரை இலட்சம் ரூபாயோடு மும்பை நகர் சென்ற துரைசாமி, ஒன்னரை ஆண்டு கழித்து வெறும் கையோடு மீண்டும் கோவை நகரை வந்தடைந்தார். என்ன காரணம் இதற்கு?

விட்டதடி ஆசை!
விளாம்பழம் ஒட்டோடே!

ஏதாவது சொந்தமாக - எந்தத் தொழிலாவது செய்யலாம் என்ற எண்ணத்தோடு துரைசாமி பம்பாய் நகர் சென்றார். எந்தத் தொழிலையும் செய்ய முடியாமல்; எடுத்துக் கொண்டு சென்ற அவரளவிலான பெரும் தொகையைச் செலவு செய்துவிட்டு, 'போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோடே' என்ற நிலையில் கோவை திரும்பினார். வந்த மச்சானுக்குப் பூ மணமாவது மிஞ்சியது. பாவம், துரைசாமிக்கு வெறும் கைகள்தான் மிஞ்சின!

எனவே, இனிமேல் எந்த ஒரு சொந்தத் தொழிலையும் செய்யக் கூடாது என்ற எண்ணத்தில், விட்டதடி ஆசை விளாம் பழத்து ஒட்டோடே என்ற அனுபவ மொழிக்கேற்ப நடந்து கொண்டார் துரைசாமி!

‘சட்டி சுட்டதடா கை விட்டதடா’ என்பதற்கு ஏற்றவாறு - ஏதாவது ஒரு வேலைக்குச் செல்ல வேண்டும், வாங்கும் சம்பளத்தோடு நிற்க வேண்டும் என்று எண்ணமிட்டார் அவர்.

கோவை நகரில் அப்போது, சர் இராபர்ட் ஸ்டேன்ஸ் என்ற ஓர் இங்லிஷ்காரர் மோட்டார் வண்டி வியாபாரம் செய்து