பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


தவறுதல்களுக்கு மனம் வருந்தி, அன்று முதல் அவரவர் மேசைகளில் கோப்புக்களை ஒழுங்காக வரிசையாக அடுக்கி, மேசைகளைச் சுத்தமாகவும் வைத்துக் கொண்டார்கள்.

இவ்வாறெலாம், ஜி.டி. நாயுடு தனது நிருவாகத்தைத் திருத்திக் கொண்டு வந்ததால்தான், உலகத்திலேயே இவரைப்போல நிருவாகத் திறமையாளர் எவருமில்லை என்று பலர் பேசும் மதிப்பும் - மரியாதையும் அவருக்கு உருவானது.

கோவை நகர் சென்றதும், கோபால் பாக் என்ற அவரது தந்தை பெயரால் உள்ள அலுவலகத்துக்குள் நுழைந்தால், அங்கே விசாரணை அறை உள்ளது. அந்த அறைக்குள்ளே ஒரு பெண் வழி காட்டி, வருவோர் போவோரை மரியாதையுடன் எழுந்து வரவேற்கும் காட்சியைக் காண முடிகின்றது.

கோபால் பாக் ஒரு விளக்கம்!

அந்தப் பெண், நாம் வந்த காரணத்தை அறிகிறார். அதன் விவரத்தை ஜி.டி. நாயுடு அலுவலகத்துக்குத் தொலைபேசி மூலம் அறிவிக்கிறார். அதற்குப் பிறகு நம்மை உள்ளே அழைத்துப் போகிறார்.

வந்தவர்கள் எதிரிலேயே நாயுடு அவர்கள் தனது தொழிலாளர்களது பல செயல்களுக்கான வழிவகைகளை விளக்கிக் கூறுகிறார். இந்த காட்சிகள் தினந்தோறும் காலை ஒன்பது மணி முதல் இரவு ஒரு மணி வரை நடந்து கொண்டே இருக்கும். சில நாட்களில் திரு. நாயுடு காலை ஆறு மணிக்கே கூட தனது அறைக்கு வந்து உட்கார்ந்து விடுவாராம்.

ஜி.டி. நாயுடு அவர்களது வீட்டுக்கும், அலுவலக அறைக்கும், தொழிற் சாலைகளுக்கும், மின்சார நிறுவனத்திற்கும், அவரது ஒவ்வொரு செயலாளர்களது அறைகளுக்கும், விசாரணை அறைக்கும், வேறு சில முக்கியமான இடங்களுக்கும் தொலைபேசி இணைப்புகள் இருக்கின்றன.

எனவே, திரு. நாயுடு அமர்ந்துள்ள இடத்தில் இருந்தபடியே மற்ற எல்லாத் துறை நிர்வாகிகளிடமும் தொடர்பு கொண்டு, நடக்க