பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

55



குன்ஸ் செர்மனி நாட்டிலுள்ள புகழ்பெற்ற ஹனோவர் என்ற நகரிலே, ஒரு பெரிய இரப்பர் சம்பந்தப்பட்ட பொருட்களைத் தயாரிக்கும் வியாபாரி ஆவார்.

கோயம்புத்துர் நகருக்கு அவர் வந்தபோது, அவரது துணைவியாருக்குத் திடீரென் உடல் நலம் குறைவுண்டானது. கடும் காய்ச்சல் நோய் கண்டது. அதனால் அவர்கள் பெரிதும் கவலையுற்றார்கள்!

அந்தத் தம்பதியர் தங்கியிருந்த இடம் போதுமான வசதிகள் அற்றதாக இருந்ததால், வேறு எங்கே தங்கினால் நோயாளிக்குரிய சகல வசதிகளும் இருக்கும் என்று எண்ணிய குன்ஸ், கோவை நகரின் முக்கியஸ்தர்களை விசாரித்தார். அவர்களில் சிலர் யு.எம்.எஸ். நிறுவனத்தின் தங்கும் அறைக்குப் போய் தங்குமாறு கூறினார்கள். அதற்கான பேருந்தையும் - வழியையும் காட்டினார்கள்.

அதற்கேற்ப, காய்ச்சல் கண்ட மனைவியுடன், குன்ஸ் U.M.S. Waiting Room-ல் வந்து தங்கியிருந்தார், இந்தத் தகவலை அறிந்த ஜி.டி. நாயுடு, அவர்களுக்குரிய வசதிகள் என்னென்னவோ அனைத்தையும் செய்து கொடுக்கத் தனது தங்கும் அறை பணியாளர்களை அழைத்து - அவர்கள் தேவையை உடனிருந்து நிறைவேற்றித் தருமாறு கட்டளையிட்டார்.

குன்ஸ் துணைவியார் காய்ச்சலில் அவதிப்படும் கஷ்டத்தைக் கண்ட ஜி.டி. நாயுடு, அந்த நோய்க்குரிய மருந்தையும் கொடுத்தார். சில மணி நேரங்களில் அக் கடும் காய்ச்சல் நோயும் குணமானது. அதனால், குன்ஸ் தம்பதியினர் சொல்லொணா மகிழ்ச்சி அடைந்தார்கள்.

நோய் சுகமாகி விட்டதைக் கண்ட செர்மன் தம்பதியர் இருவரும், ஜி.டி. நாயுடு அவர்களைச் சந்தித்து, தங்களது நன்றியைக் கூறி, செர்மன் போகப் புறப்பட்டு விட்டதாகவும், தாங்கள் அவசியம் செர்மன் நாட்டுக்கு வரவேண்டும் என்றும், எங்கள் வீட்டுக்கும் தவறாமல் வருகை தரவேண்டு மென்றும்; நன்றிப் பெருக்கோடு வணங்கிக் கேட்டுக் கொண்டார்கள். விடை பெற்றுக் கொண்டு, செர்மனியிலுள்ள ஹனோவர் நகர் சென்று