பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

65


அவர். அதற்கேற்ப இங்கிலாந்து நாட்டின் எழில் மிக்கக் காட்சிகளைப் படம் எடுத்தார்.

இங்கிலாந்து நாட்டில், எந்தெந்த நகரங்களில் புகழ்பெற்ற தொழிற்சாலைகள் உண்டோ, அங்கங்கே சென்று, அனுமதிப் பெற்று, படங்களை எடுப்பதோடு நின்றவரல்லர் நாயுடு. அந்தந்த தொழிற்சாலைகளில் நடைபெறும் தொழில் விவரங்களையும் கேட்டறிந்து, பயிற்சியும் பெற்றார்.

தொழிற்சாலைகளை
இயந்திரங்களோடு படம் எடுத்தார்

தொழிற் சாலைகளில் உள்ள மிக முக்கியமான இயந்திரங்களைப் பல வகையானத் தோற்றங்களோடு படம் எடுத்தார். இப்படி நாயுடு படம் எடுக்கும் திறமைகளை இங்கிலாந்து நாட்டுத் தொழில் உரிமையாளர்கள் அனுமதித்தார்களே தவிர, எவரும் தடுக்கவும் இல்லை; மாறாக, அதற்கான எல்லா உதவிகளையும் அவர்கள் செய்தே உதவினார்கள்.

ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின்
மரண ஊர்வலத்தைப் படமாக்கினார்!

இலண்டன் நகரம் வந்தார். அங்கே உள்ள வரலாற்றுப் புகழ் மிக்கச் சின்னங்களைப் படமெடுத்தார். இந்த நேரத்தில், இங்கிலாந்து நாட்டின் மன்னராக இருந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் காலம் ஆனார். அவருடைய மரண ஊர்வலம் லண்டனில் நடைபெற்றது.

மன்னர் மரண ஊர்வலம் என்றால், அதுவும் மா மன்னர் மரண ஊர்வலம் என்றால், அதுவும் சூரியன் மறையாத ஒரு பேரரசின் மாமன்னர் பெரும் பயணம் என்றால் எப்படி இருந்திருக்கும் அந்த ஊர்வலம்? சொல்லவும் வேண்டுமா? மக்கட் கடல் அங்கே பொங்கித் திரண்டதை?

தமிழ் நாட்டில் அதையும் புறமுதுகிடச் செய்யும் ஒரு மரண ஊர்வலம் நடந்தது - 1969-ஆம் ஆண்டில்! அதன் ஈடில்லா மரணக் காட்சிகள் எப்படி இருந்தது தெரியுமா?

1967-ஆம் ஆண்டில், 20 ஆண்டு காலமாக நடந்த தேசீய காங்கிரஸ் ஆட்சி வீழ்ச்சி அடைந்தது. அறிஞர் அண்ணா அவர்களது