பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

69



அப்போது இலண்டன் காவல் துறையின் பெரிய அதிகாரி ஒருவர் ஓடி வந்து, நாயுடு படமெடுக்கும் போது அவரை எடுக்க விடாமல் தடுத்து ஒதுக்கித் தள்ளி விட்டான்.

உடனே எட்டாம் எட்வர்டு மன்னர் அந்தக் காவல் துறை அதிகாரியை நோக்கி; "புகைப்படம் ஒன்றும் செய்யாதே. அவர் விருப்பம்போல் படம் எடுத்துக் கொள்ளட்டும்" என்று கூறியதும், காவல்துறை அதிகாரி மன்னரை ஜி.டி. நாயுடு படம் எடுக்கும் வரை ஒதுங்கி நின்றார். மன்னரே, தான் எடுக்கும் புகைப்படம் சம்பவத்துக்கு அனுமதியளித்த விட்டபோது, நாயுடுவின் மகிழ்ச்சி பல மடங்காகப் பெருகியது.

எட்டாம் எட்வர்டு மன்னரை
நேர் நின்று படம் எடுத்தார்!

மன்னரின் அந்த அனுமதியைப் பயன்படுத்திக் கொண்ட ஜி.டி. நாயுடு, மன்னர் பின்னாலேயே காட்சிச் சாலைக்குள் புகுந்தார். ஏறக்குறைய ஒரு மணி நேரம் வேடிக்கை பார்த்த மக்களையும், மன்னரது நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து 400 அடிகள் கொண்ட நீளமான படங்களாக எடுத்துக் கொண்டார்.

படம் எடுத்து முடிந்த பின்பு அவரைத் தடுத்த காவல் துறை அதிகாரி அங்கே நின்று திரு. ஜி.டி. நாயுடுவை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதை கண்ட நாயுடு, அந்த அதிகாரிக்கு வணக்கம் கூறும் பாவனையில் சலியூட் அடித்துவிட்டுத் தனது இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கே திரண்டு நின்றிருந்த மக்கள் நாயுடுவை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே நின்றார்கள்.

ஏன், இதை இங்கே குறிப்பிடுகிறோம் என்றால், ஒரு காரியத்தைச் செய்திட ஜி.டி. நாயுடு முனைந்து விட்டார் என்றால், அதை முழுவதுமாக முடிக்காமல் நின்று விட மாட்டார் என்ற சுபாவம் கொண்டவர் ஆவார். என்பதற்காகவே குறிப்பிட்டோம். அந்த மனோதிடம் அவருக்குப் பிறவிக் குணமாக அமைந்திட்ட ஒன்று. இல்லா விட்டால், புதிய ஒரு நாட்டுக்குச் சென்று, முன்பின் முக அனுபவம் இல்லாத ஒருவரால், ஐந்தாம் ஜார்ஜ் மன்னரது மரண ஊர்வலத்தையும், பத்து நாட்கள்