பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


இலண்டனில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் பந்தயப் போட்டிகளையும், எட்டாம் எட்வர்டு மன்னரின் சம்பவங்களையும் சாதாரண மனம் கொண்ட ஒருவரால் நீண்ட தொடர் புகைப் படங்களாக எடுக்க முடியுமா? எண்ணிப் பாருங்கள்!

இலண்டனில் நாயுடு, தங்கியிருந்தபோது, இலண்டன் அஞ்சல் துறை எவ்வாறு இயங்குகிறது என்பதை அறிய எண்ணங் கொண்டார். அதற்கு அவர் செய்த தந்திரம் என்ன தெரியுமா?

இலண்டன் அஞ்சல்துறை :
நிர்வாகச் சோதனை!

ஜி.டி. நாயுடு தனக்குத் தானே ஓர் அஞ்சலை எழுதிக் கொண்டார். தனது இருப்பிடத்தின் முழு முகவரியை எழுதாமல், "ஜி.டி. நாயுடு, இலண்டன், W.C.I" என்று மட்டுமே அஞ்சல் உரையின் மேல் எழுதி, இலண்டனில் உள்ள பர்மிங்ஹாம் அஞ்சல் நிலையத்தில் அதைப் போட்டு விட்டார். இதுதான் அவர் செய்த தந்திரம்.

அஞ்சல் உரையின் மேல், வீட்டு எண், வீதி பெயர், எந்த அஞ்சல் வட்டத்தைச் சேர்ந்தது அந்த இடம்; என்ற விவரங்களைத் திரு. ஜி.டி. நாயுடு தெளிவாக எழுதாமலேயே அஞ்சலகத்தில் போட்டு விட்டார்.

அவ்வாறு ஏன் செய்தார்? அவையெல்லாம் இல்லாமல் அந்த அஞ்சலைப் போட்டால், அது தனது முகவரிக்கு வந்து சேருகின்றதா? இல்லையா? என்பதைச் சோதித்துப் பார்க்கவே ஜி.டி. நாயுடு அவ்வாறு செய்தார்.

அவர் போட்ட அந்தக் கடிதம், அடுத்த நாளே அவருடை முகவரிக்கு வந்து சேர்ந்து விட்டது. இலண்டன் நகர அஞ்சல் துறையின் திறமையையும், அதன் வேலைப் பொறுப்புணர்ச்சியையும் கண்டு ஜி.டி. நாயுடு மிக மகிழ்ந்தார்.

காணாமல் போன:
கேமிரா வந்தது எப்படி?

ஒரு முறை ஜி.டி. நாயுடு அவர்கள் தனது புகைப் படக் கருவியை எங்கோ ஓரிடத்தில் கை தவறி விட்டு விட்டார். அந்தக்