பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு



பிறகு, அதே பள்ளியில் ஜி.டி. நாயுடு கைத் தொழில் கற்கும் மாணவராக 1940-ஆம் ஆண்டில் சேர்ந்து கல்வி கற்றார். அப்போது என்ன வயது தெரியுமா அவருக்கு? நாற்பத்தேழு. இப்போது எவனாவது - ஏதாவது ஒரு பள்ளியில் 47 வயதில் மாணவனாகப் போய் சேருவானா? சேர்ந்தாரே நாயுடு!

அந்த பள்ளி நிருவாகம், ஒரு மாணவனுக்கு 200 டாலர் பணம் கொடுத்து கைத் தொழில் கல்வியைக் கற்பித்துக் கொண்டிருந்தது. அதில் 40 மாணவர்கள் தொழிற் கல்வி கற்று வந்தார்கள். 40க்கு மேலாடையாக நாயுடு அப் பள்ளியிலே, அதாவது 41-வது மாணவராகச் சேர்ந்துக் கற்றார் தொழிற் கல்வியை! அந்த பள்ளியில் கைத் தொழில் மாணவராகச் சேர்ந்த முதல் இந்திய மாணவர் ஜி.டி. நாயுடுதான்!

அந்தக் கைத் தொழிற் கல்விப் பள்ளியில் ஜி.டி.நாயுடு அவர்கள், ஓய்வு நேரத்திலும், விடுமுறை நாட்களிலும் வேலை பார்ப்பார். அதற்காக வாரந்தோறும் 16 டாலர் பணத் தொகையை பள்ளி நிர்வாகம் நாயுடுவுக்குக் கொடுத்து வந்தது.

அமெரிக்காவிலும் உடை
வேட்டி சட்டைதான்!

செயிண்ட் லூயி நகர், குளிர் காலத்தில் தாங்கமுடியாத குளிர் நகராக இருக்கும் ஊர். அதாவது மைனஸ் 11 டிகிரியில் அமைந்துள்ள நகர். அந்தக் குளிர் தட்பத்தை ஐரோப்பிய மக்களாலேயே தாங்கிக் கொள்ளமுடியாது. ஆனால், நாயுடு வெப்பம் மிகுந்த நாட்டிலே இருந்து சென்றவராக இருந்தாலும், ஐரோப்பிய பேண்ட், ஷர்ட், ஹேட், பூட் போன்றவற்றை அணிந்துக் கொள்ளாமல், தமிழ்ப் பண்பாடுக்கு ஏற்பவே, 4 முழம் வேட்டி, சட்டை, மேல் துண்டோடே காலம் தள்ளினார். இதைக் கண்ட செயிண்ட் லூயி வெள்ளையர்கள் நாயுடுவின் எளிய தோற்றத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்.

எந்த ஆடைகளை எப்படி அணிந்திருந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் தோற்றத்தைக் கண்டு வியவாமல், எளிய தனது உடைகளோடு, கல்வியிலும் மிக மிகக் கவனமாகக் கற்று