பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

97


வந்தார். உணவு, உறையுள், உறக்கம் எதிலும் நாட்டமற்றவராய், அவற்றை அளவோடு ஏற்றுப் படித்து வந்தார் என்பதற்கு, இதோ இந்தக் கடிதமே ஒரு சான்று ஆகும்.

“ஒரு நாள் ஒரு வேலையை நான் காலை 9.00 மணிக்குத் துவக்கினேன். மறுநாள் பகல் 12 மணி வரையில், ஊண், உறக்கம் இல்லாமல், தண்ணி கூடப் பருகாமல் பணி செய்தேன்” என்று கோவை நண்பர் ஒருவருக்கு நாயுடு கடிதம் எழுதியிருந்தார்.

நாற்பத்தேழு வயதில் நாயுடு தொழிற் கல்வியில் சேர்ந்திருந்தாலும், அதன் நிருவாகமும், ஆசிர்யர்களும் மற்ற மாணவர்களும் அவரை ஒரு மாணவராகவே எண்ணவில்லை. எல்லாரும் நாயுடுவிடம் அன்பாகப் பேசி, மரியாதையுடனும், மதிப்புடனும் நடந்து கொண்டார்கள் என்றால், என்ன காரணம் அதற்கு?

ஜி.டி.நாயுடு அவர்களது நெடிய உயரமும், நிமிர்ந்த நடை யும், சிவந்த உடல் தோற்றமும், எளிமையாக ஆடை அணிவதும், தெளிவான பேச்சும், நுண்மாண் நுழைபுல அறிவும், ஆய்வும். ஒழுக்கமான பழக்க வழக்கங்களும், கடமையைக் கண்ணாகவும், கல்வியே மூச்சாகவும் - பேச்சாகவும் - எதற்கும் அஞ்சா நேர் கொண்ட நெஞ்சுறுதியும் - அப் பள்ளியின் ஆசிரியர்களை, மாணவர்களைக் கவர்ந்து விட்டதுதான் காரணமாகும்.

நாயுடு ஏறாத உரை
மேடைகள் இல்லை!

பள்ளி சார்பாக நடைபெறும் கருத்தரங்கங்களில் நாயுடுவைக் கலந்து கொள்ள வைப்பார்கள். பத்திரிக்கை நிருபர்கள் அவர் ஓர் இந்திய மாணவன் என்ற தகுதியில் அவரைப் பேட்டி கண்டு ஏடுகளில் செய்திகளை வெளியிடுவார்கள்.

பொது இடங்கள், கூட்டங்கள், தொழிற் கருத்தரங்குகள், சமையக் கூட்டங்கள், ஆன்மிக மன்றங்கள், சமுதாய சீர்த்திருத்தங் கள், சமத்துவ நோக்கங்கள், மனித உரிமைகள், வெள்ளை - கருப்பு இன கலை நிகழ்ச்சிகள், கலை, இலக்கிய விழாக்கள், அறிவியல் ஆய்வுப் பொழிவுகள், தொழிலியல் புதுமைகள் போன்ற நிகழ்ச்சி