பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

நாலடியார் செய்யுளும் செய்திகளும்



இளைஞர் சிலர், முகத்துக்கு வண்ணத் துகள் பூசி, வருணனைப் பொருள் ஆக விரும்புவது சரி என்று படவில்லை. பாரதி சொன்னான், “ஆண் நன்று'” என்று; அவன் அழகன் என்பதால் பெருமை இல்லை; நல்லவன் என்பதே அவனிடம் எதிர்பார்க்கப்படுகிறது; தன்னைப் பற்றிக் கவலைப்படுவதை விட்டு, சட்டைக் காதினைத் தட்டிவிட்டுக் கொண்டிருப்பதைவிட்டுக் கடமைகளில் ஈடுபடுவதே அவனுக்குப் பெருமை சேர்க்கும்; “ஊன் வளர்த்தேன், உடம்பு வளர்த்தேன்” என்பதில் பெருமை இல்லை; ”அறிவு வளர்த்தேன்; ஆற்றல் மிகுத்தேன்; செயலாற்றினேன்” என்பதில்தான் பெருமை விளங்குகிறது.

ஒருவன் தூங்கிக் கொண்டிருக்கிறான்; அவனைத் தட்டி எழுப்பினால் சோம்பல் முரித்து எழுகிறான்; அப்புறம் பார்த்தால் “இவன் தானா அவன்?” என்று வியக்க மாறிவிடுகிறான்; துளி விஷம் போதும், உயிரைக் கொல்ல; அதுபோலத் துளி தூண்டுதல் போதும் கடல் ஏழையும் தாண்ட, தொடக்கம் சிறிது எனினும் அது வளர்ந்து, விவரம் நிறைந்ததாய் நிறைகிறது; வானை எட்ட விசுவரூபம் எடுக்கிறது.

ஆலம் விதை! சிறிதுதான்; அது எந்தக் காக்கை எச்சமிட்டதோ? தெரியாது; பள்ளிக் கூடத்துச் சிறுவர் போல் அது சுறுசுறுப்பாய் வளர்கிறது. ஒரு பெரிய கூடாரமே அமைக்கிறது; அம்மரத்தின் பசுங்கிளைகளில் எத்தனை நிறப் பறவைகள் வந்து கூடு கட்டுகின்றன? அவை ‘கிரீச் கிரீச்’ என்று கதவு மூடும் சப்தத்தை உண்டாக்கிக் கொண்டு இருக்கின்றன. அதன் நிழலில் யாரோ அமரும் பலகைகள் அங்கு ஒன்று இங்கு