பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

நாலடியார் செய்யுளும் செய்திகளும்



இன்பம் தேன் துளி; மேலே தேன் கூடு; கீழே பாழும் கிணறு, மரத்தின் விழுதுகள் அவற்றோடு பாம்பின் தொகுதிகள், சொட்டும் தேன் அவன் நாவிற்குச் சுவை தருகிறது; என்றாலும் மனம் ‘திக்கு திக்கு’ என்று அடித்துக் கொள்கிறது. எல்லாம் இந்தச் சிறு துளிக்குத்தான் அவன் செய்யும் தகிடு தத்தங்கள்; தாள மேளங்கள். எண்ணிப்பார்த்தால் இந்தப் பாசம் என்பதைக் கயிறாகக் கொண்டு தொங்கமாட்டான். கிணற்றில் வீழ்ந்து சாகமாட்டான். இவற்றை விட்டு வெறியேறிச் சுதந்திரப் பாதையில் நடப்பான்.

இனியும் தாமதித்து என்ன பயன்? இளமை விணே கழிகிறது; நோயும் மூப்பும் உடன்பிறப்புகளாக இணைந்து வந்து சேரப் போகின்றன. அவற்றின் நண்பர்கள், இருமல், பொருமல், மடித்து வைத்த மருந்துப் பொட்டலங்கள், டானிக்குகள், அவற்றை ஊற்றிக் கொடுக்க ‘வெள்ளை ரோஜாக்கள்’, இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்துத் தப்பித்துக் கொள்பவன் தான் அறிவாளி; பேசாமல் சந்தியாசம் கொள். எந்தக் கவலையும் வராது; பற்றுகள் அணுகா.

அறிமுகம் ஆனவன்தான்; அதனால் தேடி வந்து அழைப்பிதழ் தருகின்றான். மணவிழாவிற்கு வருக என்று. “தனியாக இருந்து நீ இனித் துணையாக ஒருத்தியைத் தேடுகிறாய். இதன் அணையாக நீ எதைச் சாதிப்பாய்?” என்று கேட்கிறேன். “நன்மகனைப் பெற்று நானிலம் வாழ்விப்பேன்” என்கிறான். “அவள் மலடி ஆகிவிட்டால்” என்று வினா எழுப்புகிறேன். “என் செய்வது?” என்று கேட்கின்றான் “பொன் செய்வது” என்று புன்முறுவல் பூக்கின்றேன். அடுத்துத் தக்க