பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ

35



வீட்டில் பற்றாக்குறை; வெளியே தொடர்ந்து வரும் தொல்லைகள்; அவற்றிற்கு இல்லை எல்லை; சுமை தாங்கித் தாங்கி முதுகு வளைந்து விட்டது. “படமுடியாது இனித் துயரம், பட்டதெல்லாம் போதும்” என்று உயிர்விடத் துணிவது அவசரம், ஆவேசம், இது வாழ்க்கையைச் சினப்பது; அறிவுடையவர்கள் எதையும் சீர் தூக்கிப்பார்ப்பர். துன்பம் உலக இயற்கை; அதற்காகப் பொறுமையை இழக்காமல் யார் மீதும் சினக்காமல் தன் கடமை மீது கருத்து ஊன்றுவர்.

“யாகாவாராயினும் நாகாக்க” என்று சோ காக்கும் வழி கூறினார் வள்ளுவர். சோ காக்க என்று கூறுவதால் அவரையும் “சோ” என்று கூறலாம். இவர் அறிவாளி; கோமாளி அல்லர், பிறரை வருத்தும் சொற்களை அறிவுடையார் என்றும் கூறார், காய்தல் அகற்றுக; உவத்தல் கொள்க; வாழ்க்கை சாய்வது இல்லை.

காசுக்கு உதவாத கம்மியர்கள் கண்டபடி பேசுவார். அதற்காக நீ விம்மிப் பொருமுதல் வீண் செயலாகும். அவற்றை ஒரு பொருட்டாக எண்ணி அவர்களைத் தெருட்டுவது கருதி அறிவுரை கூறவேண்டாம். அவர் மீது சினந்து பயனில்லை. மேன்மக்கள் பொறுமையைக் காட்டுவர். கீழ் மக்கள் சிறு சொல் கூடப் பொறுக்கமாட்டார்கள். அடக்கம் என்பது யாது? முடங்கிக் கிடந்து ஒடுக்கம் கண்ட முதியவர் கொள்ளும் நடுக்கம்; அஃது அடக்கம் அன்று.

கோடிக்கணக்கில் குவித்த அவன் தன்னைத் தேடி வருவோர்க்கு ஜோடிப் புடவை தருகிறான் என்றால் அது கொடை அன்று; ஊர்ப் பெருந்தனக்காரன்; செருக்கு