பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

கூறினார்கள். அவள் உடுத்தியிருக்கிற கரடித்தோல் சேலையை அவிழ்த்து எறிந்துவிட்டு அழகான பட்டுச்சேலையுடுத்திக் கொண்டால் இன்னும் நல்ல இராட்சதன் ஒருவனைக் கணவனாகப் பெறலாம் என்று யோசனை கூறினார்கள். அதைக்கேட்டு ஒற்றைக் கண் இராட்சசி களிப்படைந்தாள். பிறகு மூன்று பெண்களும் அவளுக்கு சிவிச் சிங்காரித்து அழகு படுத்துவதாகச் சொன்னார்கள். அவள் கிழே உட்கார்ந்தாள். மூன்று இளவரசிகளும் சீப்புகளை எடுத்துக் கொண்டு அவள் முதுகுப் பக்கம் போனார்கள். மற்ற இரு சகோதரிகளும் இராட்சசிக்குச் சிவிக் கொண்டிருக்கும்போது சிந்திரிகா ஓசைப் படாமல் ஒரு கோடாரியை எடுத்து வந்து அந்த இராட்சசியின் முதுகில் ஓங்கிப் போட்டு அவளை இரண்டாக பிளந்து விட்டாள்.

இவ்வாறு இராட்சதனிடமிருந்தும் அவனுடைய கொடிய மனைவியிடமிருந்தும் தப்பிய மூன்று பெண்களும் ஆடிப் பாடிக் கொண்டே அந்த மாளிகையைச் சுற்றி சுற்றி வந்தார்கள். அன்று இரவு பட்டு மெத்தைகளில் ஏறிப்படுத்துத் துங்கினார்கள். காந்தாரியும், மங்களநாயகியும், "அப்பா அம்மாவுடன் இருந்ததைவிட நாம் இப்போது பணக்காரிகளாகி விட்டோம். நாம் இனி அழகாக உடுத்திக் கொண்டு அருகில் உள்ள நகரங்களுக்குச் சென்று நம் செல்வத்தையும் சிங்காரத்தையும் வெளிக்காட்டி அருமையான கணவர்களைத் தேடித் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்று பேசிக் கொண்டார்கள். ஆனால் சந்திரிகா மட்டும் அந்த மாளிகையிலேயே இருந்து வேலைகளைப் பார்த்துவர வேண்டுமென்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள்.

ஒவ்வொரு நாளும் சந்திரிகா, மாளிகையைக் கூட்டிப் பெருக்கி மெழுகித் துடைத்து, சோறாக்கிச் சமைத்து பாத்திரங்களை விளக்கிக் கழுவி வைப்பாள். அவள் அக்காள்மார்களோ, தாங்கள் புதிது புதிதாகப் போய்ப் பார்த்து வந்த நகரங்களைப் பற்றியும், அங்கு