பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

அவர்களைத் தன் முன் அழைத்து வரும்படி சந்திரிகா கட்டளையிட்டாள். வீரர்கள் அப்பெண்கள் இருவரையும் பிடித்து வந்து அவள் முன் நிறுத்தினார்கள். அவர்களை சந்திரிகா கண்டிக்கவுமில்லை; தண்டிக்கவுமில்லை; கட்டித் தழுவிக் கொண்டாள் அரசியிடம் அவர்களை அறிமுகப்படுத்தி, 'இவர்கள் என் அருமை அக்காமார்கள்! இவர்கள் நல்லவர்கள் என்னை நேசிப்பது போலவே இவர்களையும் நீங்கள் அன்பாக நேசிக்க வேண்டும்!” என்று கேட்டுக் கொண்டாள்.

தங்கை சந்திரிகாவுக்கு தாங்கள் எவ்வளவோ கெடுதல் செய்திருந்தும் இவ்வளவு நல்ல குணத்தோடு தங்களை சந்திரிகா நடத்துவதைக் கண்டு இரு சகோதரிகளும் திகைத்தார்கள். அவர்கள் ஒரு வார்த்தை கூடப் பேச முடியாமல் பிரமித்தபடியே நின்றார்கள். தங்கள் தாய் தந்தையருக்கு நாடு திரும்பி கிடைக்கப் போகிறதென்றும், அவர்கள் திரும்பிச் சென்று அவர்களோடு இருக்கலாமென்றும் சந்திரிகா தெரிவித்த போது அவர்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார்கள்.

இளவரசி சந்திரிகாவுக்கு நடந்த திருமணம் போல் வேறு எந்தத் திருமணமும் அவ்வளவு சிறப்பாக நடந்தது கிடையாது. அதன் சிறப்பை விளக்கிச் சந்திரிகா தன் காவல் தெய்வமாகிய தேவதை அருளுடையாளுக்கு ஒரு கடிதம் எழுதினாள். அந்தக் கடிதத்துடன் தன் அன்புக் காணிக்கையாகப் பல அரிய பொருட்களையும் அதே மாயக் குதிரை மூலமாகத் தேவதை அருளுடையாளுக்கு அனுப்பி வைத்தாள். அதோடு தன் பெற்றோரைக் கண்டு அவர்களைத் தங்கள் நாட்டுக்குத் திரும்பிச் செல்லும்படி சொல்ல வேண்டுமென்று அவள் அந்தத் தேவதையை வேண்டிக் கொண்டாள்.

தேவதை அருளுடையாள் இளவரசி சந்திரிகா விரும்பியதையெல்லாம் செய்து முடித்தாள். அவளுடைய பெற்றோர்கள் தங்கள் நாட்டுக்குத்