பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

அன்பும் கருணையும் கொண்ட தாங்கள் என்னைத் தங்கள் அரண்மனையில் ஏதாவது ஒரு வேலையில் சேர்த்துக் கொண்டு ஆதரிக்க வேண்டுகிறேன். நான் உங்களுக்கு உண்மையாக உழைப்பேன். என் உழைப்புக்காக நீங்கள் சம்பளம் எதுவும் தரவேண்டியதில்லை" என்று இளைஞன் கேட்டான்.

"நான் எப்போதும் சம்பளமில்லாமல் யாரிடமும் வேலை வாங்குவது கிடையாது. ஆனால், அப்படியிருக்க வேண்டும் என்று நீ விரும்புகிறபடியால் அப்படியே இருக்கட்டும்" என்றான் அரசன்.

இம்மாதிரியாக அந்த இளைஞன் ஏழு தங்கப் பசு மன்னனின் அரண்மனையில் வேலைக்குச் சேர்ந்து கொண்டான். அவன் அரச பக்தியோடும்’ உண்மையாகவும் சிறப்பாகவும் தன் வேலைகளைச் செய்து வந்தபடியால், எல்லா வேலைக்காரர்களுக்கும் மேலாளாக அவனை உயர்த்தினான் அரசன். ஆனால், அந்த இளைஞன் எப்போதும் இறந்து போன தன் காதலியை நினைத்து வருந்திக் கொண்டிருந்தபடியால், அதற்கு அடையாளமாகக் கறுப்புச் சட்டையையே அணிந்து கொண்டிருந்தான். அதனால் அவனை எல்லோரும் கறுப்புச் சட்டைக்காரன் என்றே அழைத்து வந்தார்கள்.

ஒருநாள் அவன் ஏழு தங்கப் பசு மன்னனிடம் வந்து பேசிக் கொண்டிருந்தான். 'மன்னர் பெருமானே! நீங்கள் விருந்துக்காகவும் தருமத்திற்காகவும் அளவில்லாமல் செலவழிக்கிறீர்கள். இந்த நிலையிலேயே போய்க் கொண்டிருந்தால், ஒர் ஆண்டுக் காலத்திற்குள் உங்கள் நிதிக் கிடங்கில் இருக்கும் பொன்னும் வெள்ளியும் தீர்ந்து போய் விடும். நீங்களும் ஏழையாகி விடுவீர்கள்” என்றான்.

'அதனால் என்ன வந்துவிட்டது? எனக்கு மனைவியுமில்லை. பிள்ளைகளுமில்லை. நான் ஏழையாகும் வரை என் பணத்தைச் செலவழித்துக் கொண்டிருப்பேன். என் பணம் எல்லாம் தீர்ந்து