பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

ஆனால், அவர்கள் தான் இருப்பதையே காணாதவர்கள் போலத் தன் பக்கம் முதுகைத் திருப்பிக் கொண்டு தங்களுக்குள்ளே பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்த போது, தான் கேட்பது பொய்யல்ல என்று நன்றாகத் தெரிந்து கொண்டான்.

அவன் அங்கிருந்து எழுந்து ஏழைகளும் பிச்சைக்காரர்களும் இருக்குமிடத்திற்கு வந்தான். அவர்கள் அவனிடம் பிச்சை கேட்டார்கள். “நண்பர்களே! நான் உங்களுக்கு ஒன்றும் கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறேன். ஏனென்றால் என் பொன்னும் வெள்ளியும் எல்லாம் தீர்ந்து போய்விட்டன. உங்களுக்குக் கொடுக்க என்னிடம் எதுவும் இல்லை. எனக்காக நீரிலும் நெருப்பிலும் குதிக்கத் தயாராக இருப்பதாக நீங்கள் எத்தனையோ முறை கூறியிருக்கிறீர்கள். அதனால் நான் எதிர்காலத்தைக் குறித்து, அஞ்சாமல் வாழ்ந்து வந்தேன். "நண்பர்களே! நீங்கள் ஏழைகள் தான், இருந்தாலும் உங்களிடம் இருப்பதில் ஒரு சிறு பங்கு எனக்குக் கொடுத்து உதவினால் போதும்"

உடனே பிச்சைக்காரர்கள் எல்லோரும் அவனுக்கு எதிராகக் கூச்சல் போட்டார்கள். "பணக்காரர்களோடு விருந்து சாப்பிட்டுக் குடித்துக் கும்மாளமிட்டதால் தான் உங்கள் பணமெல்லாம் கரைந்து போய்விட்டது. நாங்கள் இல்லாதவர்கள் ஏன் உங்களுக்குப் பங்கு தரவேண்டும்? வேண்டுமானால் எங்களைப் போல் தெருத் தெருவாய் பிச்சையெடுத்து உம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும்!” என்று எல்லாப் பிச்சைக்காரர்களும் கூறினார்கள்.

தான் கேட்டது, தன் காதில் விழுந்தது உண்மைதானா என்று ஏழு தங்கப்பசு மன்னனால் சிறிதும் நம்பமுடியவில்லை. ஆனால் அந்தப் பிச்சைக்காரர்களுக்குள் நடந்த பேச்சுக்களையும் தான் அவர்களுக்குப் பிச்சை போடாததால் அவர்கள் தன்னைப் பழிப்பதையும் வெறுத்துப் பேசுவதையும்