பக்கம்:நூறாசிரியம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கஉ

 உயர்ந்த பழமைச் சொத்துகள் பயன்படுத்தப்பெறாததாலேயே பாழாகிப்போன வரலாறு தெளிந்த இவரின் நெஞ்சம் நம் மொழி வளங்காக்கவும் - முதுசொம்மை (பிதிரார்ஜிதத்தை) நம்மவர்க்கு உரிமையாக்கவும் எண்ணிய நல்லுணர்வின் செயற்பாடும் ஆகும், இது இருப்பவற்றையேனும் இழவாதிருக்க இவ்வுள்ளுணர்வு இவரிடம் எழுச்சி கொண்டிருந்தது உரிமை மறப்பை உடம்பாடாகக் கொண்டு உளுத்திழிந்து கொண்டிருக்கும் நம் தமிழர்களுக்கு உள்வலிவேற்றும் திடம்பாட்டு முயற்சியிது ஒருவகையில், இதுவும் ஓர் உரிமை மீட்பே “மறைந்து வரும் தமிழ்ச் சொற்கள்” என்னும் தலைப்பில் நீண்ட தொடர்களாகத் தொடருமாறு வழக்கமழிந்து வந்த வட்டார வழக்குச் சொற்களைத் தென்மொழியிதழில் வரிசைபடத் தொகுத்து வெளிப்படுத்தி வந்ததும் இவ்வகை முயற்சியிலொன்றே

கொய்யாக்கனி-மகள் புகு வஞ்சி. எண் சுவை எண்பது ஐயை முதலியன போன்ற பல்வேறு வாழ்வியல் உலகியல் இலக்கிய அமைப்புக் கருக்களையே - இத்தொகைநூலும் பெரும்பான்மையாகக் கொண்டிருக் கின்றதாகலின் இதனை ஐயா அவர்களின் அழுந்திய கொள்கைகளின் வெளிப்பாட்டுப் படையலிடாகக் கொள்ள வேண்டியதில்லை! சில்லிடங்களில் முழுத்தும் (முழுவதும்) வாழ்க்கைத் துய்ப்புகளையே பேசுவதையும் - சில்லிடங்களில் இறையியல் நம்பிக்கை யேற்படுத்த முயல்வதையும் சில்லிடங்களில் மெய்மவியல் சிந்தனை கொளுத்த முனைவதையும் சில்லிடங்களில் உடன் உறையும் போலியர்க்கு இரங்கியும் சினந்தும் வெறுத்தும் நோதற் கூறுதலையும் காண்கின்ற நிலைகளால் இம்மேற்குறித்த உணர்வை அனைவரும் உணர்ந்து கொள்ள நேரலாகும்.

ஆயினும் அவ்விடங்களில் மிகப் பெரும்பான்மையின, இலக்கியங்கள் என்ற பெயரில் இக்கால் வெளிப்பட்டாரவாரிக்கும் பொக்காந்தன்மை யுடைமைகளைப் பெற்றிராமல் - துய்ப்புணர்வுகளுக்குத் தீனியருத்தும்பல்வேறு நல்லிலக்கிய நயச்செறிவுகளால் மிளிருகின்ற மெய்ம்மைகள் நல்லறிவினார் நயந்து பாராட்டும்படியே நடையிடுகின்றன. இளம்பரு வத்திலேயே கணவனையிழந்த பெண்ணுக்கு மீண்டும் மணம் புணர்த்துமாறு அறிவுறுத்தலும் போட்டு: 13) கணவன் விருப்பத்திற்கேற்ப தன் விருப்பத்தினை விட்டுக் கொடுக்க மனைவி இசைந்தியங்க முற்படுகையில்கணவனானவன் அம் மனைவி விருப்பத்திற்கிசைய இயங்கும் இல்லறக் காட்சிகளை வாழ்வியல் செழிப்புற வழங்குதலும் (பாட்டு : 11) பல்வேறு கடைப்பிடிகளுக்கான நேரிய தூண்டல்களையும் இத் தொகைநூல் தொடையலிட்டிருக்கின்றது!

பாவேந்தர் - பாவாணர் - தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா காமராசர்-இந்தியெதிர்ப்புப்போரில் உயிர்நீத்த-உயிர்துறந்தஈகச் செம்மல்களாகிய விருகாம்பாக்கத்து அரங்கநாதன் அண்ணாமலைப் பல்கலைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/14&oldid=1210036" இலிருந்து மீள்விக்கப்பட்டது