பக்கம்:நூறாசிரியம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கரு




7. “மஞ்சமை குன்றத்து மணிவாய் குடைந்து
துமி துரி ஈட்டிய மூரித் தேறல்
தமிழ்பெறக் கெழிஇய தகையோர் தொடர்போல்
முற்ற முற்றச் சுவை மூவாதே” (பா:40:வரி:59)

8, எஞ்சிய தின்னவர்க் கிவ்வள வெறுமுன்
துஞ்சிய ரெவருந் தோன்றிலா தாரே (பா:3:வரி:9-10)

9. விழைவே வேண்டலின் நனிகுறை வினதே” (பா9:வரி:)

இலக்கிய இலக்கணப் பயிற்சியின் தோய்வையுணர்த்தும் மிகப் பல்விடங்கள் இந்நூலில் ஒளிருகின்றன: (அலமரல் - துயரச் சுழற்சி. (ஒ.நோ. ‘அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி” (தொல்காப் பியம்.உரி:8:13) பாவலரேறு ஐயா அவர்களின் உரையுரைப்பின் மிகப் பல்லிடங்களில் கருத்துத் துலக்கத்திற்கான விரிப்புக்குரிய இடங்களில் - உரிய எல்லையிகவாத தெள்ளிமைசான்ற உரைப்புச் சுடருகின்றது! ('வானோக்கி எண்கர் வாளி எப்பின் அன்ன” - பாட்டு : 2 : வரி : 1213) (வானோக்கி = போக்கிற்குத் தடுப்பு அற்ற இப் பரந்து அகன்ற வானத்தில்-) மிக நுண்ணிய வெளிப்பாடு ஒன்றையும் இவ்விடத்திற் கருதலாம். பிற்பகுதிப் பாட்டொன்றில் கடற்கரை மணலைக் குறிக்க வருமிடத்தில்,"கரைசிறுமணல்” என்கின்றார். (ஆற்று மணலினும் கடல் மணல் சிறியதாகையால். மிகப் பல்லிடங்களில் உவமைத் திறத்தின் கொள்ளையழகுகளைக் கண்டுவக்கலாம்! ('நுங்கேய் கிளிஞ்சில்') (பிற்பகுதிப்பாட்டு (உரை துங்கு போலும் கிளிஞ்சில்)

இன்னவாறு பன்னூறு சிறப்புக் கூறுகளைச் செறிவுற்றாரும் இத் தொகைநூல்- தமிழிலக்கியவுலகுக்குப் பெருந்தொகை வரவென்பதை வருங்காலம் வல்லிதாயுணரும் அக்காலம்

“நெடுந்தொலை விலையே, கடுஅணி மைத்தே”
(தென்மொழி: இயல்! இசை 1-12)

அறம் பெருகும், தமிழ் படித்தால்!
அகத்தில் ஒளி பெருகும்!
திறம் பெருகும் உரம் பெருகும்!
தீமைக் கெதிர் நிற்கும்
மறம் பெருகும் ஆண்மை வரும்!
மருள் விலகிப் போகும்!
புறம் பெயரும் பொய்மை யெலாம்
புதுமை பெறும் வாழ்வே!
( பள்ளிப்பறவைகள்: பக்கம் 129 )

( 12-3-96 )

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/17&oldid=1251503" இலிருந்து மீள்விக்கப்பட்டது