பக்கம்:நூறாசிரியம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

நூறாசிரியம்

விளைவாய்ப் பிறந்த கருத்து வெளிப்படுதலே மொழி. ஈண்டு மொழியைக் குறிக்காதது அதன் அடிநிலையாகிய கருதுதல் குறித்தமையால் என்க. ‘புரிதல் காட்சிக்கும் கேள்விக்கும் கருத்துக்கும் உடலுறுப்புகளைப் பயன் படுத்துதல். உயிரின் மெய்யியக்கம் முன் மூவகை அறிவின் பின்னரே தோன்றுகின்றது. அதுவரை மகவு இயங்கும் இயக்கம் மெய் உயிரை இயக்கும் இயக்கம் என்னை? மெய்ப்பசி தோற்றத்து மகவு அழுங்கலும், மெய்ப்பசி யடக்கத்து மகவு நகை விளங்கலும் உயிரையியக்கிய மெய்யியக்கம் என்க.

ஆட்சியுட்பட்ட அளவினானே - ஆட்சி - ஆளுகை, ஆட்சியுட்பட்டது - ஆளுகைக்கு உட்பட்டது. அளவினானே - அளவினால் தோன்றுவது. முற்கூறப்பட்ட செயல்கள் யாவும் உயிர்கட்கு இயற்கையாந் தன்மையினால் வரையறுக்கப்பட்ட அளவினது. என்னை? காட்சிக்கும் கேள்விக்கும் காலமும் இடமும் எல்லை என்க, கருதுதலுக்கு ஐயறிவியக்கத்தாற்பட்ட அறிவு எல்லை என்க, புரிதல் அவ்வறிவால் இயக்கப்பெற்ற மெய்யின் வினை. அதற்கு மெய்யின் வலிவும் அளவும் எல்லை என்க. இவ்வளவின் உட்பட்ட அறிவு செயல்படற்கும் மனமே எல்லை என்க. என்னை? மனம், வட்டாடும் பலகை போல்வது. அறிவு வட்டுப் போன்றது. அறிவுக்கரணமாகிய ஒத்த ஐம்புலன்களும் ஆடுநர் போன்றன. வாழ்க்கை ஆட்டம் போன்றது என்க. இதில் வேறலும் தோல்வியும் ஆட்டத்தின் பயன் போன்றன. அதில் வரும் இன்பும் துன்பும் நிலையற்றன. என்னை? அவ்வின்பாலும் துன்பாலும் மெய்ப்பயன் ஒன்றும் விளையாமையால், மெய்யே பயனுறாக் காலத்து உயிர்க்கு ஒரு பயனும் இல்லை என்றவாறு.

மீட்சியின்றொழுகல் - அவ்வளவு நிலைகளைக் கடந்து ஒழுக இயலாத தன்மையின் நிற்றல்,

அவைதிறம் கடவார் - அவைப்பட்ட எல்லை நிலைகளைக் கடக்கப் புனையற்றவர். புனை மெய்யறிவு, ‘ஐயுணர் வெய்தியக்கண்ணும் பயமின்றே, மெய்யுணர்வில்லாதவர்க்கு எனும் திருக்குறளை ஒர்க.

மாட்சிமைப்பட்ட பொருள்-மாண் - பெருநிலை பெருமை, மா பெரியது, அண்-சாரியை, அண்ணித்து நிற்றலாகிய தன்மை, அண்ணித்தல்-ஒன்றல்பொருந்தல் வேறற்றநிலை. ஒன்றிய நிலையில் இயங்கும் பெரும் பொருள்.

அறியார் - அறிவினான் அறியவியலார், பன்னுதல் - நிலைத்தல், ஒன்றிநிற்றல் உலகெலாம். இவ்வுருள் நிலம்போன்ற உலகங்கள் எல்லாம். என்னை? கோளுங் கதிரும் உடுவும் புடவியும் என்றபடி

மலர்த்து - விளங்கச் செய்து விளங்கல் - தோன்றல்

அவிப்பான் - அவித்தல் செய்வான், மலர்த்துத் தொழிற்கு இறுதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/30&oldid=1234704" இலிருந்து மீள்விக்கப்பட்டது