பக்கம்:நூறாசிரியம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை

பாவலரேறு ஐயா அவர்களின் மறைவிற்குப் பிறகு அவர்தம் முதற் (64-ஆம் அகவை) பிறந்த நாளை யொட்டி, விரிவான உரையுடன் கூடிய ' நூறாசிரியம் ' என்னும் இச் சிறந்த பா நூலை முழுமையாக வெளிக்கொணர்வதில் பெருமை கொள்கிறோம்!

இந் நூலின் முதற்பத்துப் பாக்கள் முதற்பகுதி-முதற் பதிப்பாக, தியி.. 2010 (1979) ஆம் ஆண்டு வெளிவந்தது. அதைத் தென்மொழி அன்பரான புலவர் வண்ணாங்குண்டு திரு.சிவசண்முகம் - கலாவதி இணையர் தம் திருமண பரிசாக வெளியிட்டு வழங்கினார். அதன் இரண்டாம் பதிப்பு, தென்மொழி அமைச்சராக இருந்த சீரிய தமிழ்த்தொண்டர் திரு. அழ.இளமுருகன் தம் அச்சகத்தில் அச்சிட்டு, திபி. 2017 (1985}, இல் வெளிக்கொணர்ந்தார். அடுத்த பத்துப் பாக்கள் கொண்ட இரண்டாம் பகுதி திபி. 2012 (1981)இல் கோவை - பெருஞ்சித்திரனார் நூல் வெளியீட்டுக் குழுவினரால் வெளியிடப் பெற்றது. அவற்றில் ஐயா அவர்களின் பதிப்பு முன்னுரைகள் இடம் பெற்றுள்ளன. அவை வருமாறு:

முதற் பதிப்பு முன்னுரை

' நூறாசிரியம் ' எனும் இந் நூல் நூறு ஆசிரியப் பாக்களைக் கொண்டது. ஆசிரியப்பாக்கள் அகவற்பாக்கள், ஆசிரியம் என்பது யாப்பையும் அகவல் என்பது ஒசையையும் குறிக்கும். ஓசையால் பெயர் பெறுவது ஆசிரியம் ஒன்றே. 'சீர்சால் அகவல்' எனும் சிறப்புற பேசப் பெறுவதில் பா வகை. இப்பாவகை 'ஆசிரியம்' எனப்படுவதால் இதன் தலைமை நிலை விளங்கும். பழஞ் செய்யுட்களுள் இதுவே பெரும்பான்மையாக நிற்கும் பா வகையாம். எளியார்க்கு எளியதும் வலியார்க்கு வலியதுமான இப் பா வகை, தமிழ் யாப்பு முறையில் முதல் தோற்றமாகவும் இருத்தல் வேண்டும் என்றும் கருதற்பாலது.

இதன் பெரும்பாலான பாக்கள், 'தென்மொழி' முதன் முதல் தொடங்கப் பெற்று இடைநின்ற ஓராண்டுக் காலத்து 5-9-61-இல் தொடங்கி 21-71-62 முடிய எழுதப்பெற்றன. பிற, சில ஆங்காங்கே காலங்கருதி எழுதப்பெற்று இதனுள் சேர்க்கப் பெற்றன. கிடைத்த ஓய்வு வீணே கழிய ஒருப்படாத என் உணர்வுள்ளம் இந்நூலின்கண் நின்று: திளைத்தது. என்று கூறின் மிகையாகாது.

பாகுபாடின்றி அவ்வக்கால் எழுந்த உணர்வுகளை யெல்லாம்.. ஒருங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/5&oldid=1209969" இலிருந்து மீள்விக்கப்பட்டது