பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

14) பாதாலம் ஆகிய ஏழும் கீழ் உலகங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

புண்ணியம் செய்பவர்கள், 'மோக்ஷம்' அல்லது வைகுண்டம் என்று மதிக்கப்படும் மேலுலகிற்குச் செல்வதாகவும்-

பாவம் செய்பவர்கள் “நரகம்” என்னும் கொடிய கீழ் உலகிற்குச் செல்வதாகவும் புராணங்கள் கூறுகின்றன.

இவற்றில் பூலோகம் என்பது நீங்கள் வாழும் பூமியைக் குறிப்பதாகும். பூமி - முதல் ஏழு மேலுலக வரிசையில் இருக்கிறது.

எனவே, ஒரு மனிதன் இந்தப் பூமியில் பிறந்திருப்பதே அவன் முற்பிறவியில் செய்த புண்ணியத்தினால் தான். அப்படி இந்தப் புண்ணிய பூமியில் பிறந்தும்; பாவம் செய்கிறவன் தான் மறு பிறவியில் நரகத்தில் கிடந்து உழல்கிறான் என்று புராணம் கூறுகிறது. ஆனால்-

பாவம், புண்ணியம், சுவர்க்கம், நரகம் என்பனவெல்லாம், மனிதன் மண்ணில் நல்ல வண்ணம்; நீதி நேர்மையோடு வாழ வழி வகுக்கும் உயர் நோக்கோடு தான் புராணத்தில் இடம் பெற்றிருக்கிறது. விஞ்ஞானம் இந்தப் புராண உலகங்களை ஏற்றுக் கொள்ளவில்லை.