பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10


பனிக்கட்டி ஓரிடத்தில் மலை போல வளர்ந்து நின்றது. காற்று அதை நோக்கி வீசியது. ஒஓ வென்றபேரிரைச்சலோடு காற்று மோதியது. காற்று வீச வீச பனிக்கட்டி இறுகியதே தவிர அசையவே யில்லை. காற்று தன் வலுவெல்லாம் சேர்த்து வீசியது. தன் ஆற்றலெல்லாம் கூட்டி ஆர்ப்பரித்தது. காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணிவரை தொடர்ந்து மோதியது காற்று.

பனிக்கட்டி சிறிது கூட அசையவேயில்லை.

"பனிக்கட்டிதான் வலுவானது” என்று தீர்ப்புக் கூறிவிட்டுக் கதிரவன் மேற்குத் திசையில் மறைந்து விட்டது.

காற்று மனம் குன்றி ஒடுங்கிப்போய் விட்டது. அன்று இரவு முழுவதும் வெளியில் தலைகாட்டாமல் ஒடுங்கிப் போய் விட்டது.

மறுநாள் காலையில் கீழ்த்திசையில் தோன்றிய கதிரவன், பனிக்கட்டி போட்டியில் வெற்றி பெற்றதற்காகப் பாராட்டுத் தெரிவித்தது.

"நான் வலுவானவன் என்பதை நீ தரிந்து கொண்டாய் அல்லவா? இனி நீயும்