பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோலபுரி ஊர்வலம்



கோலபுரி என்ற ஊரிலே வண்ணங்கி என்ற ஒரு மன்னன் இருந்தான்.

மன்னன் வண்ணங்கி எப்போதும் இன்பமாகவேயிருந்தான். அவனுக்குப் புதுப் புது ஆடைவகைகளையணிவதில் விருப்பம் மிகுதி. காலையில் எழுந்தவுடன் ஓர் ஆடையணிவான்; குளித்தவுடன் மற்றோர் ஆடையணிவான்; அரசவைக்கு வரும்போது வேறோர் ஆடை அணிவான்; பகல் உணவுக்கு ஒர் ஆடையணிவான்; பிற்பகலில் இன்னுமோர் ஆடையணிவான்; நகர்வலம் வரும்போது ஒவ்வொரு வீதி கடந்ததும் ஓர் ஆடை மாற்றுவான். வேட்டைக்குச் சென்றால் அதற்கென்று ஓர் ஆடை, நீதிவிசாரணையின் போது மற்றோர் ஆடை. இப்படி அவன் ஒரு நாளைக்கு இருபது ஆடை மாற்றுவான்.