பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

செய்யாத தன் கண்ணுக்குத்தான் ஆடை தெரியவில்லை என்று நினைத்துக் கொண்டு, வெளியில் அதைக் காட்டிக் கொள்ளாமல் "மன்னர் பெருமானே, இந்த உடையில் நீங்கள் இந்திரன் போல் இருக்கிறீர்கள்" என்று பனிக்கட்டி போன்ற குளிர்ந்த சொற்களால் புகழ்ந்துரைத்தார்.

அரசன் கண்ணுக்குத் துணியும் தெரியவில்லை; அதன் வண்ணமும் தெரியவில்லை. அவன் இவ்வாறு நினைத்தான்:குடிமக்களுக்கு என் கடமையை நான் சரியாகச் செய்யவில்லை என்று நினைக்கிறேன். என் கடமையை நினைவுபடுத்தவே கடவுள் இந்தக் கலைஞர்கள் மூலம் இந்த மாய ஆடையை அனுப்பியிருக்கிறார். ஆனால், நாமாகப் பேரைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று மனத்துக்குள் நினைத்துக் கொண்டு, "அமைச்சரே இது மிக விந்தையான ஆடைதான்!" என்றான்.

எத்தர்கள் அரசனுக்கு ஆடையணிவிக்கும் சடங்கு முடிந்தவுடன் ஊர்வலம் புறப்பட ஏற்பாடாகியது.