பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

 ஆஆ! ஆஆ! ஆஆ! என்று அந்தச் சிரிப்பொலி பெரிதாகியது.

“என்னைப் பழித்துச் சிரிப்பவன் எவன்? எதிரில் வா! பார்க்கிறேன்!” என்று கூச்சலிட்டது காற்று.

வெள்ளை வெளேரென்று பனிக்கட்டி அதன் எதிரில் மலை போல் வந்து நின்றது.

"ஏ காற்றே! என்ன சொன்னாய்? உலகில் நீதான் வலுவானவனா? என்ன நெஞ்சுரம் உனக்கு? என்னைப்பற்றி உனக்குத் தெரியாதா? உன்னைக் காட்டிலும் நான்தான் வலுவானவன்! இனிமேல் நீ வலுவானவன் என்ற எண்ணத்தையே விட்டு விடு!"என்று கூறி நிமிர்ந்து நின்றது பனிக்கட்டி.

“இல்லை, நான் தான் வலுவானவன். நீ என்முன் மண்டியிட்டு வணங்கு. இல்லா விட்டால் சும்மாவிட மாட்டேன்!” என்று சீறியது காற்று.

“என்ன? நான் உன்முன் மண்டி யிடுவதா? மூடக் காற்றே! இப்பொழுது நான் கூறுகிறேன் கேள். பேசாமல் என் காலடியில்