பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

புதியதோர் உலகு செய்வோம்

திருமண வயதுக்குப் பெண் வருமுன், அவள் அழகு, அடக்கமான இயல்பு, பொறுமை, தியாகத்தன்மை, ஆடவனை மகிழ்விக்கக்கூடிய பல்வேறு கலைகளில் தேர்ச்சி, ஆகிய சிறப்புக்களே கணிக்கப்படுகின்றன. இவள் ஓர் ஆடவனை மகிழ்விக்க வேண்டும்; ஆண் குழந்தைகளைப் பெற வேண்டும். இன்னும் சுமங்கலியாக உயிரையும் விட வேண்டும். இதிலும் ஒரு முரண்பாடு. கணவன் எத்தனை வயதுடையவனாகவும் இருக்கலாம். நோயாளியாக, வறியவனாக, வாழத் தகுதியற்றவனாக இருக்கலாம். எப்படி இருந்தாலும் இவள் வாழ்நாளில் இவள் அவனைத் தெய்வமாக மதித்து அவனை மகிழ்விப்பதும் போற்றுவதும் இவள் கடமை. இத்துடன் இவள் சுமங்கலியாக இறப்பது மேன்மை!

இவ்வாறு இவளுடைய சொந்தமான அறிவும் திறமைகளும் சுதந்தரமாக மலர வாய்ப்பில்லாத நிலையில், கடமைகள், மரபு அழுத்தும் நெறிகளில் திணிக்கப்படுகின்றன. மிகப் பெரிய அரச குடும்பத்துப் பெண்ணானாலும், வறியநிலையில் ஏவல் செய்து வயிறு வளர்க்கும் வகுப்பிற்பட்டவளானாலும், இந்த அடிப்படையிலேயே அவனது மனம் பதப்படுத்தப்படுகிறது.

ஒரு பெண் தனிப்பட்ட முறையில் அறிவிலும் திறமையிலும் சிறந்து விளங்கினாலும் மேன்மையில்லை. எல்லாச் சிறப்புக்களும் உடைய ஓர் ஆண்மகனைச் சார்ந்து அவனுக்கு உரியவள் என்று வரும்போதுதான் அவள் சமூகத்தில் மதிக்கப் பெறுகிறாள்.

இந்நாள் பெண் கல்வி கற்று வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கும், பொருளாதார அளவில் முன்னேற்றம், பல சலுகைகள் அளிக்கப் பெறுகின்றன. பெண்கள் நலத்துறை