பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

புதியதோர் உலகு செய்வோம்

உயர்மட்டத்தில், பெண் வெறும் அலங்காரப் பொருளாக, கணவனின் வாணிப வெற்றிக்கு மதுவார்க்கும் அடிமையாகச் செயல்படுவதும்,

இடை மட்டத்தில் பெண் அலுவலகத்திலும் வீட்டிலும் கொத்தடிமைபோல் செயல்பட வாழ்வைப் பல ஆயிரங்கள் கொடுத்து வாங்கும் நிலையில் இருப்பதும், அடித்தளத்தில் எல்லா வகைகளிலும் எந்த மறுமலர்ச்சிக்கும் வழியின்றி அழுத்தப்படுவதும் இத்துணை சட்டங்களும் திட்டங்களும் வந்த பின்னரும் ஏன் மாறவில்லை?

அடித்தளத்தில் சட்டங்களைப் பற்றிய உணர்வோ, மீறுவது பற்றிய அச்சமோகூட இல்லை. இதனால் பெண்ணின் உரிமைகள் அன்றாடச் சட்டமீறலில் பறிக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன.

பெண் குழந்தைகள் அதிகமாக உழைக்கிறார்கள்; கல்வி மறுக்கப்படுகிறது. வயது வந்ததும் வராததுமாக ஓர் ஆடவனின் உரிமைப் பொருளாவதற்குத் தடையில்லை. தாய்மை திணிக்கப் பெறுகிறது. உடல் நலம் அலட்சியமாக்கப்படுகிறது. இந்தப் படியில் சிசு மரணங்கள், பெண் மரணங்கள் அதிகம்.

இந்த நிலை ஏன்?

வரதட்சணைக் கொடுமையை எடுத்துக் கொண்டால் நேராக, எதிர்க்கேள்வி வரும் தாய்மார்தான் குற்றவாளிகள். கணவனின் சகோதரியும் தாயுமே புதிய மணப்பெண்ணைக் கொடுமைப்படுத்துவதில் இணைந்து நிற்கின்றனர்.

நமது நாட்டை ஆண்ட ஆங்கிலேயர் மக்கள் ஒற்றுமையைக் கூறு போட்டால் எளிதாகத் தாம் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று கண்டிருந்தனர். அந்நாள் அந்நிய