பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

17

ஆதிக்கத்திலிருந்து விடுபட, மக்கள் சக்தியை ஒன்று திரட்ட, பல்வேறு சாதி சமயப் பிரிவுகளுக்கு அப்பால் ஒன்றுபட்ட உணர்வை, நமது தேசப்பிதா காந்தியடிகள் தூண்டிவிட முன்நின்றார். சர்வாதிகார வெறியை எதிர்த்து, புதிய பொருள் முதல் கொள்கையை அமுலாக்கி, சமத்துவக் குடியரசை நிலைநிறுத்த, ஏழைப்பாட்டாளிகள், உழவர், பெண்கள் ஆகியோரை ஒன்று திரட்ட, பிளவுகளைத் தாண்டி லெனின் அழைத்துச் சென்றார்.

சாதியில்லை, சமயமில்லை, ஒன்றுபடுவோம் வாருங்கள்; ஒன்றுபடுவோம், உரிமைக்குப் போராடுவோம் என்றெல்லாம் தாராளமாகக் கோஷங்கள் இன்றும் ஒலிக்கின்றன. ஆனால் இதெல்லாம் ஆண்களுக்குத்தான் பெண்களுக்கு இல்லை என்ற பொதுக்கருத்து இன்னமும் தகர்க்கப்பட்டிருக்கவில்லை. சொல்லப் போனால், பெண்களுக்குள் ஏது சாதி? ஏது சமயம்? ஏது பிரிவு? பெண்ணைப் பொறுத்தவரையில் அவள் மாளிகையில் பிறந்தாலும் கணவனுக்குக் குற்றேவல் செய்கிறாள். அவன் உடலநலிவுற்றபோது, அவள் எல்லாப் பணிகளையும் செய்பவளாக இருக்கிறாள். ஒரு மகவுக்குத் தாயென்றால் அவள் எல்லா அழுக்குகளையும் கழிவுமலங்களையும் பொறுக்கிறாள். இதனாலேயே காந்தியடிகள், துப்புரவுப் பணி செய்யும் தோட்டி வருக்கத்தினரை, சமுதாயத்தின் தாய்க்குலத்தினர் என்றார்.

துப்புரவுக்காரி, சலவைக்காரி, வீடு சுத்தம் செய்து குற்றேவல் செய்பவள், சமையற்காரி, செவிலி என்று அவள் செய்யாத வேலை என்ன இருக்கிறது?

‘மலையில் வளர்ந்தாலும் உரலில் மசிய வேண்டும்’ என்ற பழமொழிக்கே உரித்தானவள் பெண். பெண்ணின் இந்த உழைப்புக்குச் சமூக மதிப்புக் கிடையாது என்ற

பு.உ.-2