பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

புதியதோர் உலகு செய்வோம்

கருத்துக்கு நல்ல விளக்கம்கூடக் கூறலாம். அவளுக்கே என்று உரியதாக்கபட்ட சமையற்பணி, சமுதாயத்தில் கடை நிலை ஊழியமாகக் கருதப்படுகிறதே!

இதில் எந்த ஒரு பணியைச் செய்யாமல் ஒரு பெண் வாழ்நாளைக் கழிக்க முடியும் ஒரு செல்வனான ஆண், உடல் வருந்த, அசையக்கூட வேண்டாம். தன் படுக்கையைத் தட்டிப் போட்டுக் கொள்ள வேண்டாம். தன் உணவுத் தாலம் கூடக் கழுவ வேண்டாம். ஆனால் மாளிகையில் வாழ்ந்த பெண்ணானாலும், தனது மகவு மடியில் அசுத்தம் செய்யும்போது மகிழ்வுடன் ஏற்றுத் துப்புரவு செய்கிறாள். அதற்காக இரவு பகல் பாராது உழைக்கிறாள்.

இவருக்குச் சாதி இருக்கிறதா? சாதி தொழிலைச் சார்ந்துதான் அமைகிறது என்றால், பெண் எந்த சாதிக்கு உரியவள்? இவள் இயக்கத்தில் எந்தத் தொழிற்கூறும் விலக்கில்லையே? இந்த சாதிக்குரியவள் என்று தன்னைக் கூறிக் கொள்ள இவருக்கு என்ன தகுதி இருக்கிறது?

சமயம்... என்று எடுத்துக் கொண்டால், எந்த ஒரு சமயமும் பெண்ணை ஆணுக்குச் சமமாக ஒப்பிடவில்லை. கோயில் குருமார் என்ற உரிமையை எந்த உயர்ந்த சாதிப் பெண் பெறுகிறாள்?

எல்லாச் சமயங்களும், பெண்ணை இரண்டாம்பட்ச நிலையில் ஆணைச் சார்ந்து வாழும் கோட்பாட்டில் வைப்பதில் முதன்மை பெற்றிருக்கின்றன.

பால் சார்ந்த குற்றங்கள் இருவருக்கும் பொது வென்றாலும், பெண்ணுக்குக் கல்லெறியும் கசையடியும் நியாயமாக்கப்பட்டிருக்கிறது. ஆண் குற்றம் புரிய உரிமை கொண்டவனைப் போல் விடப்படுகிறான். பெண் சுமையும் சுமக்கிறாள்; ஏச்சுக்கும் பேச்சுக்கும் சமூகப் புறக்-