பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

19

கணிப்புக்கும் ஆளாகிறாள். அவளுடைய உயிரையே குடிக்கும் விளைவுகளும்கூட, சமயம் சார்ந்து அவள் மனம் மிகவும் நொய்ம்மைப்படுவதாலேயே ஏற்படுகின்றன. எனவே, சமயம் என்று சார்ந்து அவள் பெருமை கொண்டாடுவதும்கூட தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் செயல்தான்.

ஆனால் இதுபற்றிய விழிப்புணர்வு பெண்ணுக்குப் பூரணமாக வர இயலாதபடி, அவள் அறிவுக்கண்கள், ‘கலாசார’ மரபுகள் என்ற திரைகளால் மூடப்படுகின்றன. சமயநெறிகள் என்ற கோட்பாடுகள் இறுக்கமாக அவளைத்தான் பிணிக்கின்றன.

அடுத்து, பெண்களின் உறவுகள், குடும்பம் சார்ந்தும் , சமூகம் சார்ந்தும் எவ்வாறு நிலைப்படுத்தப் பட்டிருக்கின்றன என்று பார்ப்போம்.

தாய்-மகள், சகோதரி-சகோதரி மாமி-மருமகள்; அண்ணி நாத்தி, இவை முக்கியமான உறவுகள். இவைதவிர, ஒரே ஆணை மணந்து கொண்ட பெண்களுக்கிடையே உறவுகள்; சகோதரர்களை மணந்த பெண்களுக்கிடையே உறவுகள் - என்றும் வகைப்படுத்தலாம்.

தாய்-மகள் உறவு, பற்றும் பாசமும் உடைய உறவு.

இந்த உறவு, தாய்க்கும் மகனுக்குமிடையே உள்ள உறவுபோல் நெறிப்படுத்தப்படவில்லை.

என்ன இருந்தாலும் மகள் - இவள் பிறந்த வீட்டைத் துடைத்துக் கொண்டு போகிறவள்; இவளால் புகுந்த வீட்டுக்குத்தான் ஆதாயங்கள்; இவளிடமிருந்து எந்த நன்மையையும் எதிர்பார்க்க இயலாது; இவருக்கு வண்ணம் வரிசைகள் செய்யும் போதுதான் சமூகக் கவுரவமும் மதிப்பும் உண்டாகிறது.