பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

புதியதோர் உலகு செய்வோம்

ஆணைச் சார்ந்து வாழவேண்டிய சமூக மதிப்பின் காரணமாக, பெண்களின் உறவுகளிடையே பிளவு மனப்பான்மை தோன்றுகின்றன.

ஒரு மாமியார் இதன் காரணமாகவே மருமகளை விரோதமாகப் பார்க்கிறாள். ஒரு சகோதரி தன் சகோதரன் மனைவியை எதிரி போல் பாவிக்கிறாள். தாய்-மகன் பாசம் கட்டுப்படுத்தும் உடமைக்குரிய மூடப்பாசமாக உருவாவதற்கும் இந்த ஆழ்ந்த உணர்வே காரணமாகிறது.

ஒரு பையன் திருடுவது, குடிப்பது போன்ற தீய பழக்கங்களில் விழும்போதுகூட, அவனைத் திருத்திக் கண்டிக்கும் துணிவு ஒரு தாயிடம் தோன்றுவதில்லை. ஏன் இந்தக் கண்மூடிப் பாசம்?

இதே சமயம், மகள் தவறாக நடந்தால், அவளுக்கு மட்டும் கடும் தண்டனை கொடுக்கிறாளே, அது ஏன்?

உண்மையில் மோசம் போகும் மகளே, சமுதாயக் குற்றம் செய்யும் மகனைவிடப் பரிதாபத்துக்குரியவள். ஆனால் மகனை மறைத்து வைக்கும் தாய் மகளை நாலு பேரறியக் கொடுமைப்படுத்துகிறாள். ஏன்?

அடுத்து, பெண்களைப் பிளவுபடுத்தும் இன்னொரு முக்கியமான கூறு, பெண்ணைப் பற்றிய ஒழுக்க விமரிசனங்கள்.

ஒழுக்க அவதூறு, பெண்ணுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய கொடுமை. அவள் நல்வாழ்வையும் எதிர்கால மேன்மையையும் குலைக்க ஒரு சிறு அவதூறு போதுமானதாக இருக்கிறது. ஏன்? மிகச்சிறந்த தொழில் புரிபவளை, திறமைசாலியை ஒன்றுக்கும் உதவாமல் மழுங்கடிக்கச் செய்யவும் இந்த ஒழுக்கப் பழியே