பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

புதியதோர் உலகு செய்வோம்

வெளிப்படும்போது, உலகை, பல நுட்பங்களை, மேலும் பல்வேறு மொழிகளைக் கற்றறியும் திறமையும் சிறப்பாகவே கூடும். இதனால், இந்நாட்களில் இன்னும் எழுத்தறிவே பெற்றிராமல் இருக்கும் அடித்தளப் பெற்றோரின் மக்களும், எளிதில் அடிப்படைக் கல்வியில் தேர்ச்சி பெற்று, வேற்று மொழியில் அறிவியல், தொழில் நுட்பக் கல்வியில் பயிற்சி பெறவும் முன்னேற்றமடைவர். பின் தங்கிய வகுப்புக் குழந்தைகளுக்குச் சிறப்புப் பயிற்சிகள் கொடுக்க, ஆசிரியர்-மாணாக்கர்-என்ற விகிதம், குறைவானதாக இருக்க வேண்டும். பாடச்சுமை, புத்தகங்கள், சோறு, தண்ணீர்ச் சுமைகள் என்று பிஞ்சுகளை முதுகு வளையும், கை இழுக்கும் சுமைகளிலிருந்து விடுபடச் செய்வது கட்டாயமானதொரு திருத்தம் மழலைப் பள்ளிகளில், ஐந்து வகுப்பு வரையிலான துவக்கப்பள்ளிகளில், தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்போது, புத்தகச்சுமைகள் தேவையில்லாமலிருக்கும். ஒவ்வொரு பள்ளியிலும், தண்ணீர்- குடிநீர் குழந்தைகளுக்குக் கிடைக்கச் செய்வதும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

இந்தப் பள்ளிகள் ஒரே மாதிரியான பாடங்கள், பயிற்சிகள் என்று அந்தந்த இடத்தின் தேவைக்கேற்ப நிறுவப்படும்போது, எந்தப் பெற்றோரும் எந்தப் பள்ளியிலும் குழந்தைகளைச் சேர்க்கலாம். எனவே, வீட்டுக்கு அருகாமையிலுள்ள பள்ளியே குழந்தைக்கு உரியதாக்கப்படும். காலை நேரத்தில், சாலைகளில், கோழிக்குஞ்சுகளைப்போல் குழந்தைகளையும், புத்தகப்பை, தண்ணீர்குப்பிகள் தொங்கும் வண்டிகளும் நெருங்கும் அபாயங்களும் தவிர்க்கப்படலாம்.

பெண் மக்களைத் தரம் தாழ்த்தும், உடலுழைப்பைக் கேவலப்படுத்தும், தொழில், சாதி என்று பிரிவும்