பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

புதியதோர் உலகு செய்வோம்

3. அடுத்து, ஒரு குடியரசு நாட்டின் மக்களின் அறிவு வளர்ச்சியிலும், உருவாக்கத்திலும் மக்கள் தொடர்பு சாதனங்களாகிய பத்திரிகைகள், வானொலி, சினிமா, சின்னத்திரை ஆகியவை பெரும்பங்கு வகிக்கின்றன. சுதந்தரம் பெற்று ஐம்பதாண்டுகளுக்கு மேலாகியும் இந்நாட்டு மக்களிடம் இருக்கும் எழுத்தறியாமையை முற்றிலுமாக ஒழித்துவிட முடியவில்லை. எனவே வானொலிக்கு மக்களை மூலைமுடுக்கெல்லாம் தேடிச் சென்று தொடர்பு கொள்ளும் சாதனம் என்பதில் ஒரு சிறப்பிடம் உண்டு. ஆனால், பொழுதுபோக்கு, களிப்பூட்டல் என்ற அம்சத்தை அதிகமாகப் பெற்றிருக்கும் காட்சி ஊடகங்கள் மக்களிடையே வானொலியைக் காட்டிலும் அதிக செல்வாக்குப் பெற்றிருக்கின்றன. இந்நாட்களில் தொலைக்காட்சிப் பெட்டி, அன்றாட உணவுக்கும் குடிநீருக்கும் உத்தரவாதம் இல்லாத குடிசை வாழ்மக்களிடையேகூட முன்னுரிமை பெற்றிருக்கிறது. வான் வழி வரும் எந்தத் தாக்கத்துக்கும் அரசு கட்டுப்பாடு எல்லைகளை வகுக்க முடியாது. எனவே விளம்பரம் என்ற கருப்புக்கட்டியைக் கவரும் ஈக்கள் போல், போட்டி போட்டுக் கொண்டு மக்களின் மனதைக் கீழ்முகமாக இழுக்கும் நிகழ்ச்சிகளும் காட்சிகளும் மடலவிழ்கின்றன.

இந்த ஆக்கிரமிப்பில், குஞ்சு குழந்தைகள், ஆண் பெண், முதியவர் ஈறாக அனைத்து வர்க்கத்தினரும் அடக்குகின்றனர் என்றால் மிகையில்லை.

எழுதுகோலை ஆயுதமாகக் கொண்டு இயங்கும் படைப்பாளரும், சிந்தனையாளரும், சமுதாயத்தின் முதுகெலும்பாகக் கருதப்படுகின்றனர். ஒரு பள்ளி ஆசிரியர், வகுப்பறையில் மட்டுமே செயல்படுகிறார். ஆனால் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி போன்ற