பக்கம்:புது வெளிச்சம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7



தவம்

டிநாயைக் கண்ட திடகாத்திர வாலிபன், கைக்குக் கிடைத்த கல்லையெடுத்து வீசுவதுபோலவே! நமது திருமூலர் சொல்லையெடுத்து வீசுவதில் ஒரு நிபுணர். கருணையோ கவலையோ இன்றிச் சொல்லைக் கொண்டு மூடர்களைச் சாடுவதோடு புரியாத ஒன்றைப்புரியவும் செய்து விடுவார்.

மக்கள் முகத்தில் இரண்டு கண்கள் இருப்பது உலகிலுள்ள அனைத்தையும் காண்பதற்ககவேதான் . காண்பதற்கன்றிக் கண்களால் வேறு பயனெதுவும் இல்லை. ஆனால் இந்த முகக் கண்களைக் கொண்டு பார்த்தே தீரவேண்டிய அனைத்தையும் பார்க்க முடியாது. அத்தகையவற்றை நாம், நம் அகக்கண்ணைக் கொண்டே பார்த்துத் தீரவேண்டும்.

புது வெளிச்சம்

27