பக்கம்:புது வெளிச்சம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இகம், பரம் என்ற இரண்டு சொற்கள் மொழிகளில் வைத்து வழங்கப்படுவது யாவரும் அறிந்ததே. இகம் எனின் இப்பிறப்பு. ‘பரம்' எனின் மோச்சம் என்று அர்த்தமாம். மனிதனாகப் பிறந்த நாம் வாழ்வு முடிந்து கடைசியாகப் போய்ச் சேருமிடம் மோச்சம் - தேவலோகம், எனப்படுகிறது.

வாழ்நாளில் இந்தத் தேவலோகம் போய்ச் சேர்வதற்கான தகுதியை நாம் அவசியம் தேடிக்கொள்ள வேண்டும். இதற்கு, இந்தக் காலத்தில் உள்ள ஒரே வழி 'பக்தி' மார்க்கம் எனப்படுகிறது. நடைமுறையில் உள்ளதும் இது ஒன்றுதான். ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்த மார்க்கத்தையே நாடு முழுவதும் இந்து மதத்தினர் எனப்படும் நாம் பின்பற்றி வருகிறோம்.

ஒவ்வொரு மனித சீவனும் தேவலோகமோ, அல்லது நரகலோகமோ போயே தீரவேண்டியது. அங்கு அவன் வாழ்நாளில் தேடிக்கொண்ட புண்ணியம் பாவங்களின் அளவுக்குத்தக்க காலம் சுவர்க்கத்திலோ நரகத்திலோ வசித்து முடித்து மறுபடியும். இதே நிலவுலகத்தில் வந்து பிறந்துவிட வேண்டும் என்று இந்து மதநூல்கள் நம்முடைய மனங்களில் திணித்து வைத்திருக்கிறது. நாமும், இதனை உண்மையென நம்பி நாடகமாடிக்கொண்டிருக்கிறோம்.

இந்தச் சுவர்க்கத்தை நாம் எளிதில் அடையும் சூக்கும வழிகளும் பழங்காலத்திலிருந்தே வழங்கி வருகின்றன. புண்ணியம் புரியாது, வெறும் பாவமே செய்து வந்திருந்தாலும் அதனால் கெட்டுபோனது யாதொன்று மில்லை; மார்கழி மாதம் ஏகாதசி விரதம் சரிவர இருந்து விட்டால்போதும் சுவர்க்கத்தில் நமக்கு இடம் ஒதுக்கப்பட்டு விடும் என்று நம்மில் பலர் நம்புகிறார்கள். இந்தச் சுவர்க்கத்துக்கு ஆசைப் படாதவர்கள் ஒரு சிலர் கூட இல்லை. ஆசைப்படுகிறவர்கள் இந்து மதத்தில் பெரும்பான்மையாயுள்ளனர். மேலும் ஒரு விபரம்.

நமது தமிழ் வார இதழில் ஒருசிறுகதையில், எப்போதோ படித்த நினைவு. 'திருமணங்கள் 'சுவர்க்கத்தில் நிர்ணயிக்கப்படுகின்றன, என்று. எல்லாம் வல்ல ஒருவர் அந்தச் சுவர்க்கத்தில் நமக்காக இருந்து கொண்டு, இன்னார்க்கின்னார் என்று முடிபோட்டு விட்டால் அப்படியே தான் அது முடியும், முடிந்து மூன்று மாதம் முடிவதற்குள், மண்ணென்னெயோ, வேறு உயிர்நீக்கும் மருந்தோ

32

கவிஞர் வெள்ளியங்காட்டான்