பக்கம்:மகான் குரு நானக்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

மகான் குருநானக்


உருக, கடவுள் தியான வழிபாடுகளிலேயே காலம் கழித்து வந்தார். தகப்பனாருக்கு இந்தச் செயல் மேலும் வருத்தத்தையே தந்தது.

மகனிடம் இப்படிப்பட்ட ஒரு தெய்வீக வழிபாடு இருப்பதை மேதாகலுராய் ஒருபோதும் சிந்தித்ததே இல்லை. இவ்வாறு நினைத்த நேரத்தில் தியான மயக்கத்தில் மகன் ஆழ்ந்து கிடப்பதை அவர் ஒரு வியாதியாகவே நினைத்துக் கொண்டார். அந்த நோயை இன்னதென அறிந்து கொண்டு மருத்துவம் செய்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்ற ஒரு தெம்பு அவர் உள்ளத்திலே தெரிந்தது. அதனால், அடுத்த ஊரிலே இருந்த மருத்துவரை அழைத்து வந்து மகனது உடலைச் சோதனை செய்யும்படி கூறினார் தந்தை!

நானக்கின் தந்தை அவரை அழைத்துக் கொண்டு வரும் போதே தனது மகன் உடல் நலக் குறைவை எப்படியாவது சுகப்படுத்த வேண்டும் என்று மருத்துவரைக் கேட்டுக் கொண்டதற் கேற்ப, மருத்துவர் நானக் நாடியைப் பிடித்துப் பார்த்தார். நானக் தனக்குள்ளே சிரித்துக் கொண்டு, பின்பு மருத்துவரைப் பார்த்து 'மருத்துவரே! உங்களுடைய உள்ளம் என்ற நாடியை முதலில் சோதித்துப் பாருங்கள்' என்றார்.

நானக் கூறியதைக் கேட்டதும் மருத்துவர் ஒரு கணம் திகைத்து நின்றார். மறுபடியும் அவர் மருத்துவரைப் பார்த்து, மருத்துவரே! எனக்கு என்ன நோயென்று உமக்குத் தெரியுமா? வேறு ஒன்றுமில்லை. கடவுளிடம் இருந்து பிரிந்து விட்டதால் உருவான பிரிவுநோய். அதன் ஆற்றாமையால் நான் வருந்திக் கொண்டிருக் கிறேன். அந்த வருத்தமே எனது நன்மைக்கும், நல்வாழ்விற்கும் ஒர் அடையாளமாக உள்ளது. அதனால் வருத்தமே ஒரு நோயாகவும், அதைக் குணப்படுத்தும் மருந்தாகவும் இருக்கிறது. இரண்டுமே ஒன்றுக்குள் ஒன்றாகவே இருக்கின்றன என்றார்.

நானக் பேசிய தத்துவார்த்தங்களைக் கேட்ட மருத்துவர். பதினேழு வயதுடையவன் பேச்சா இது? ஏதோ எல்லாம் உணர்ந்த ஒரு ஞானியைப் போல பேசுகிறானே என்று திகைத்து நின்றார். அவருடைய தத்துவ விளக்கம் வைத்தியரைத் திணறடித்தது. "இந்த