பக்கம்:மகான் குரு நானக்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

மகான் குருநானக்


நானக்கின் இல்லற வாழ்க்கை இனிமையாக நடந்து வந்ததின் அடையாளமாக, அவருக்கு பூரீசந்த் என்ற ஆண் குழந்தையும், லட்சுமி சந்த் என்ற பெண் குழந்தையும் பிறந்தார்கள். திருமணம் நடந்து மூன்று ஆண்டுகளாயின. இப்போது அவருக்கு வயது இருபது!

சுல்தான்பூர் வட்டாரத்தில் மழை இல்லை. வயல்கள் வறண்டன. மக்கள் உணவுப் பஞ்சத்தால் கடும் வேதனையடைந்து சொல்ல முடியாத கஷ்டங்களைப் பட்டு ஊர் ஊராக அலையும் நிலை ஏற்பட்டு விட்டது.

சுல்தான் பூர் மிகவும் நற்குணவான் என்று மக்களால் போற்றப் பட்டவர் மனித நேயம் கொண்ட மக்கள் தொண்டர். அவர் மக்கள் படும் உணவுப் பஞ்சத்து வேதனைகளை நேரில் சென்று பார்த்து. ஆறாத் துயரம் அடைந்தார். அப்படிப்பட்ட அவர் என்ன செய்தார் தெரியுமா?

நானக்கை அழைத்தார் உணவுப் பஞ்சத்தினால் மக்கள் துன்பப் படக்கூடாது என்று அவருக்குக் கூறி, மக்களில் யார் வந்து விலைக்குக் கேட்டாலும், இல்லை என்று சொல்லாமல் தான்ியங்களைக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் நானக்கும் அதுதான் சரியான யோசனை என்று கூறி, அவரது உத்தரவுப்படியே நடப்பதாகச் சொல்லி விட்டு வந்தார்.

மறுநாள், அரசாங்கத் தானியக் களஞ்சியத்தில் யார் வேண்டுமானாலும் சென்று உணவு தானிய வகைகளை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம் என்று தண்டோரா போடப்பட்டது. மக்கள் தாங்க முடியாத மகிழ்ச்சியால் அலைமோதிச் சென்று கூட்டம் கூட்டமாக தானிய வகைகளை விலைக்கு வாங்கலானார்கள்.


நானக் அல்லவா தானியக் களஞ்சியக் காப்பாளர் அவரே மக்களுக்குரிய தானியங்களை அளந்து கொடுத்து வந்தார். தானியங்களை அளவுக் கருவிகளால் ஒன்றிரண்டு மூன்று என்று அளந்து போடுவார். பதின்மூன்று என்ற எண் வந்துவிட்டால்