பக்கம்:மகான் குரு நானக்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

மகான் குருநானக்


அந்த மூன்று நாட்களுக்குப் பிறகுதான் நானக் தியானம் கலைந்து எழுந்தார். சுற்று முற்றிலும் தனது சூழலை நோக்கினார். அப்போது இறைவனைப் புகழ்ந்து ஒரு பாடலை அவர் பாடினார். அந்தப் பாடலின் பொருள் இது :

"இறைவா! நீ ஒருவன். உண்மை என்பதே உனது பெயர். ஆதியும் நீயே, அந்தமும் நீயே, உனக்கு நிகர் நீயே, அழிவற்ற கடவுளும் நீயே, பிறப்பு இல்லாதவன் - இறப்பும் இல்லாதவன்; சகல சக்தியும் நீயே இறைவா!" என்பதே அந்தப் பாடலின் மூலக் கருத்தாகும்.

இன்றைக்கும் சீக்கிய மதத்தைச் சேர்ந்த மக்கள் அனைவருக்கும் இந்தப் பாடலின் கருத்தே திருமந்திரச் சக்தியாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. இந்தப் பாடலை நானக் பாடி முடித்த பின்பு, ஓடைக்கரை ஓரத்தை விட்டு எழுந்து நடந்தார். அவரது கால்கள் இரண்டும் கல்லறை ஒன்றை நோக்கி நடந்து கொண்டிருந்தன.

இவ்வாறு மைத்துனர் மாறிவிட்டதைக் கண்ட திவான் ஜெய்ராம், ஒரு முஸ்லிம் மதகுருவை அழைத்து வரும்படி தனது பணியாட்களுக்கு உத்தரவிட்டார்.

வந்த அந்த முஸ்லிம் மத குருவிடம் தனது மைத்துனர் மனநிலையை திவான் விளக்கினார். அதைப் புரிந்து கொண்ட அந்த மதகுரு, நானக்குக்கு ஒன்று போய் பிடித்திருக்க வேண்டும் அல்லது சித்தப் பிரமையாக இருக்க வேண்டும்" என்றார்.

முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த முல்லா கூறியதைக் கேட்ட நானக் மறுபடியும் ஒரு பாடலைப் பாடத் தொடங்கினார். எந்த சித்தப் பிரமையைத் தெளிய வைத்திட வந்தாரோ முல்லா, அதே பிரமை மனிதரான நானக் பாடத் தொடங்கினார். இதோ அந்தப் பாடலில் அவர் கூறிய கருத்து :

"மனிதர்கள் விந்தையானவர்கள். ஆனால், அவர்களுடைய எண்ணங்களோ, முட்டாள்தனமானவை. எவருடைய ஞானத்தில் இறை அன்பு தவழ்கின்றதோ அவரைப் பார்த்து, இந்த