பக்கம்:மகான் குரு நானக்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

மகான் குருநானக்


நானக் கூறியதுடன், இல்லாமல் அதற்கான மந்திரத்தையும் போதித்து வழியனுப்பினார். இதுதானே சமுதாயத்தை திருத்த வந்த ஓர் சற்குருவின் ஞானோபதேசம்!

தவறு செய்தவன் தனது தவறைத் தெரிந்து அதை மீளவும் செய்யாத திருந்திய மனம் பெற்று விட்டாலே, பிறகு அவன் திருந்திய ஆத்மாதானே!

சத்குரு வார்த்தை சத்திய வார்த்தை என்று நம்பிய சஜ்ஜன் அடுத்த கனமே புறப்பட்டுவிட்டான் அவன் யார் யாரைக் கொடுமை படுத்தினானோ, கொலை செய்தானோ, கொள்ளை படித்தானோ அவன் நினைவுக்குத் தெரிந்த வரையில் ஒவ்வொரு துடும்பங்களிடமும் சென்று மன்னிப்புக் கேட்டான். அக்குடும்பத்தாரின் கால்களிலே விழுந்து கதறி கண்ணீர் சிந்தினான்!

அப்போது பழிக்குப் பழியாகப் பலர் அவனுக்கு எண்ணற்றத் துன்பங்களைக் கொடுத்தார்கள். அடி உதைகளை அவன் பெற்ற போதும் கூட, அவர்களிடம் காலில் விழுந்து சத்குரு நானக் உபதேசம்படி மன்னிப்புக் கேட்டான். பாவங்களிலே இருந்து விடுதலையானான் இறைவா நீயே கதி என்று யோகமும் தியானமும் செய்து இறைவனையே எண்ணியெண்ணி மனமுருகினான் சஜ்ஜன்.