பக்கம்:மகான் குரு நானக்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1. யோகி குருநானக்!

மிழ்நாட்டில் எண்ணற்ற சித்தர்கள் தோன்றி, தொண்டாற்றி மறைந்துள்ளர்கள். தமிழ்த் தென்றல் திரு.வி.க. கூறுவதைப் போல "திருமூலர் பெருமானைப் போன்ற பல சித்தர்கள் இன்றும் நம்மிடையே வாழ்கிறார்கள். கைலாய மலையின் அடித்தளத்திலே மட்டும் அவர்கள் பூத உடலோடு வாழவில்லை. அம்மலைக்கு மேலே சிவபெருமானோடு என்றுமே அருகிருந்து கொண்டு உண்மை விளக்கங்களை அவ்வப்பொழுது மக்களுக்குத் தந்து வரும் பிறப்பும் இறப்புமற்ற வாழ்வுடையவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள்" என்ற விளக்கத்தையும் அவர் கூறியுள்ளார்.

ஏறக்குறைய நாற்பது சித்தர்கள் கலை, ஞானம், பக்தி போன்ற துறைகளிலே தோன்றியவர்களையும் சேர்த்து, கணக்கிட்டிருந்தாலும், அவர்களுள் முக்கியமானவர்கள் என்று மக்களால் போற்றப்படும் பெரும் ஞானிகள் பதினெண் சித்தர்களே ஆவர். அவர்கள் அனைவரும் யோகக் கலைகளிலே பண்பட்ட மேதைகளாவர்.

காட்டிலும் மேட்டிலும் மலைகளிலும், குன்றுகளிலும் சுற்றி அலைந்து காயோ கனியோ கிடைத்தவற்றை உண்டு உறங்கி, பொறிகளின் புலன்களை அடக்கி வென்று, அற்புதங்களை மக்களுக்குச் செய்து காட்டினார்கள். அவர்கள் எழுதி வைத்த திருமந்திரங்கள், திருமறைகள், பாடல்கள் அனைத்தையும் இன்று நாம் படிக்கும் போது சிந்தைகள் சிலிர்க்கின்றன.

அந்த யோக ஞானிகள், புதுப்பது மூலிகைகளைக் கண்டறிந்து மருத்துவ உலகுக்கு வழங்கி, மருத்துவ மன்னர்களாக இன்றும் விளங்குகிறார்கள். அவர்களால் உருவாக்கப்பட்ட யோகக் கலைகள் மக்களது நோய் தீர்க்கும் கலைகளாகவே இன்றும்