பக்கம்:மகான் குரு நானக்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

மகான் குருநானக்


வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆரோக்கிய வாழ்வுக்குரிய மருத்துவக் கலைகளாகவும், மனோதத்துவக் கலைகளாகவும், அவை போற்றப்பட்டு வருகின்றன. அதனால் அவர்களது கலைகள் யாவும் சித்துக் கலைகளாகவே மதிக்கப்படுகின்றன. எனவே, சித்தர்கள் என்று மக்களால் அவர்கள் அழைக்கப் படுகிறார்கள்.

சித்தர் யார்? தகுதிகள் என்ன?

அறிவு, அறியாமை என்ற அன்றாட நிலைகளைக் கடந்தவர்கள் சித்தர்கள்: இறை அருளால் பெற்ற பேரறிவால் உயர்ந்து நிற்பவர்கள் சித்தர்கள் வரம்பைத் தாண்டிய உண்மையை உணர்ந்தவர்கள் சித்தர்கள்! உண்மை ஒன்றே; எல்லாம் ஒருவனே, இவைதான் சித்தர்கள் கண்ட உண்மை!

சித்தர்கள் கல்வியால் மட்டுமே அறிவை வளர்ப்பவர்கள் அல்லர் வெறும் தத்துவக் கடல்களிலே மட்டும் ஆழம் காண்பவர் அல்லர் ஆன்மீகத்தை நூல்களிலே ஆய்ந்தாய்ந்து, அதையே பேசிப் பேசி மக்களை மயக்குபவரும் அல்லர் சித்தர் அறிவில் அவர்கள் ஆலமரம் போன்றவர்கள். இவ்வுலகில் வாழும் வரை இறையுணர்வோடு ஒன்றிணைந்து வாழ்பவர்கள்! அவர்கள் உள்ளத்திலே ஓடிடும் உயிர் நாடியே உண்மை என்ற மெய்ப்பொருளாகிய இறை தத்துவம் தான் அவர்கள் தான் சித்தர்கள்!

சித்தர்கள் நெஞ்சமெனும் அருவியிலே அன்பும் கருணையும் இரு கரைகளாகக் காட்சி தரும். மக்களது அறியாமை எனும் மண்ணை அரித்துக் கொண்டு அறிவெனும் சலசலப்பு ஓசைகளை எழுப்பி அது நீராகப் பெருக்கெடுத்து வரும். பாமர மக்கள் இடையே அது பண்புடன் கலந்து, அவர்கள் இடையே இரண்டற ஒன்றி வாழ்ந்து, இன்ப துன்பங்களில் பங்கேற்று, தக்க நீதி நெறிகளைக் கற்பித்து, நல்வழிகளில் அவர்களை நடத்திடத் தமது உழைப்புகளைத் தியாகம் செய்பவர்கள் தான் சித்தர்கள்.

தவயோகத்துள் புகுவர் தன்ணொளி பெறுவர்; உலகியல் எண்ணங்களைப் படிப்படியாகக் குறைப்பர் பரம் பொருளை தமது