பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

மனத்தின் தோற்றம்



இன்சொல் கயிற்றின் விருந்தை:- “மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து நோக்கக்குழையும் விருந்து” (90) - குறள்.

குரவர் சொல் கயிற்றின் மனத்தை. “மனம் தூய்மை செய் வினை தூய்மை இரண்டும் இனம் தூய்மை தூவாவரும்” குறள் - 455

அறக்கயிற்றின் திருவை:

“அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
கல்விருந்து ஓம்புவான் இல்” (84)
“காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள” (52)

பொறையால் புகழையும், இன்சொல்லால் விருந்தையும், குரவர் சொல்லால் மனத்தையும் கட்டுப்படுத்தி நிலை நிற்கச் செய்யலாம். ஆனால், அறத்தினால் திருவைக் கட்டுதல் என்பது அவ்வளவு எளிய செயலன்று.

காக்கைபோல் கரவாமல் எல்லாருக்கும் உதவிக் கொண்டு இருந்தால் செல்வம் நிலைக்குமா? ஒரு போதும் நிலைக்காது.

இந்தச் சிக்கலுக்குத் தீர்வு என்ன? காக்கை போல் மறைக்காமல் பலருக்கும் உதவுபவரிடமே செல்வம் இருக்க அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். மாறாக, பிறர் ஈட்டிய செல்வத்தையோ - தீய வழிகளில் ஈட்டிய செல்வத்தையோ வைத்துக் கொண்டு பிறருக்கு உதவாதவரிடத்தில் செல்வம் இருக்க அரசு உடன்படலாகாது; அச்செல்வத்தை அரசு பறிமுதல் செய்து பலருக்கும் உதவும்படியான பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்பதே இதற்கு உரிய சிக்கல் தீர்வாகும். இதைத்தான் திருவள்ளுவர் மறைமுகமாகக் கூறியிருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது.