பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

மனத்தின் தோற்றம்



மணி (நேரம்) ஊர் மக்கட்கு உரத்த ஒலி வாயிலாக அறிவிக்கப்படுமாம். ஊர் காப்பாளர் ஊரைச் சுற்றிச் சுற்றித் துடி அடித்துக் கள்வர்களினின்றும் காத்து வருவ ராம். இவற்றை,

“பழவிறல் மூதூர் பாயல் கொள் நடுநாள்
கோமகன் கோயில் குறுநீர்க் கன்னலின்
யாமங் கொள்பவர் ஏத்தொலி அரவமும்” (7:63-65)
“ஊர் காப்பாளர் எறிதுடி ஓதையும்” (7:69)

என்பவற்றால் அறியலாம். குறுநீர்க் கன்னல் என்பது, துளித் துளியாக நீர் சொட்டும் ஏதோ ஒரு வகை அளவைக் கொண்டு அந்தக் காலத்தில் நேரத்தின் அளவை (மணியை) அறிந்து வந்தார்கள் என்பதைப் புலப்படுத்தும்.

தோப்பி

தோப்பி என்பது, நெல்லோடு சில பொருள்களைச் சேர்த்துக் காய்ச்சித் துழவி உண்டாக்கும் ஒருவகைக் கள்ளாகும். இது, வீட்டிலே கூடக் காய்ச்சி உண்டாக்கப் பட்டதாம்.

“முழங்குநீர் முன்றுறைக் கலம்புணர் கம்மியர்
துழந்து அடு கள்ளின் தோப்பி உண்டு அயர்ந்து
பழஞ்செருக்கு உற்ற அனந்தர்ப் பாணியும்” (7:70-72)

என்பது பாடல் பகுதி. கலம் புணர் கம்மியர்=கப்பவில் வேலை செய்யும் தொழிலாளர்கள், இவர்கள் தோப்பி உண்கின்றனர். செருக்கு, அனந்தர் என்னும் சொற்களின் பொருள், தேநீரோ (Tea), காபியோ (Coffee) பருகினால் உண்டாவது போன்ற ஒருவகை விரு விருப்பு - உற்சாகம் என்பதாகும். ஈண்டு ‘பழஞ் செருக்கு’ என்பது குறிப்பிடத் தக்கது. வேலை செய்வதால் அலுத்து விருவிருப்பு குறைந்து விடுகிறது. தோப்பி உண்பதால், மீண்டும் பழைய விரு