பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

மனத்தின் தோற்றம்



தம் உயிருக்கு ஊறு நேரிடலாம் என்பதை அவர்கள் முன் கூட்டியே உணராதவர்களா? உணர்ந்து வைத்தும், உயிரினும் ஒழுக்கத்தைப் பெரிதாக மதித்தே - ஒழுங்கை நிலை நாட்டவே உயிரை விட்டார்கள் அன்றோ? கயவன் ஒருவனிடம் சிக்கிக் கொண்ட கற்புடைய மங்கை அக்கயவனால் தான் கற்பழிக்கப்படக்கூடிய நிலை நெருங்கியபோது தற்கொலை செய்து கொள்கின்றாளே! அது ஏன்? உயிரினும் ஒழுக்கத்தைப் பெரிதாக மதித்தமையினாலன்றோ?

இவர்களெல்லோரும் உயிரினும் ஒழுக்கத்தை மதித்து உயிர் விட்டதனால், புகழுடம்புடன், எல்லோராலும் பாராட்டப் பெற்று இன்றைக்கும் வாழ்கிறார்கள்-இனியும் என்றும் வாழ்வார்கள் அல்லவா? எனவே, ஒழுக்கமின்றி உயிர் வாழ்பவர்கள் பலராலும் தூற்றப்படுதலின் அவர் களே உயிர் வாழாதவர்கள்; ஒழுக்கத்திற்காக உயிர் விட்ட வர்கள் பலராலும் போற்றப்படுதலின் அவர்களே உயிர் வாழ்பவர்கள் என்பது வெளிப்படை. எனவே,

“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.”

பலர் பல தான தருமங்களைப் பற்றியும், சில பயன் உள்ள செயல்களைப் பற்றியும், அவற்றால் உண்டாகக் கூடிய பயன்களைப் பற்றியும் நன்கு தெரிந்து கொண்டு, அவற்றைக் கடைப்பிடித்தும் வரலாம். ஆனால் அவர்களிடம் நல்லொழுக்கம் இல்லாமலும் இருக்கலா மல்லவா? இந்நிலை கூடாது. புகழை விரும்பியும், முத்தியை நம்பியும் பிறர்க்கு வாரி வழங்குபவர்கள் பலர், தம் சொந்த ஒழுக்கத்தில் மிகத் தவறியிருப்பதைக் காண்கின்றோ மல்லவா?

இவர்களை மனத்தில் வைத்துதான் திருவள்ளுவர் "மக்களே! நீங்கள் கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பீர்களேயானால், மாட்டை