பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

மனத்தின் தோற்றம்


என்று சிறப்பித்துள்ளார். சுப்பிரமணிய பாரதியார்,

“வாழ்க கிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே!
வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி
இசை கொண்டு வாழியவே!' (23)


“பல்விதமாயின சாத்திரத்தின் - மணம்
பாரெங்கும் வீசும் தமிழ்நாடு
வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தத்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
சிங்களம் புட்பகம் சாவகம் - ஆதிய
தீவு பலவினும் சென்றேறி - அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு
விண்ணை இடிக்கும் தலைஇமயம் - எனும்
வெற்பை அடிக்கும் திறனுடையார் - சமர்
பண்ணிக் கலிங்கத்து இருள் கெடுத்தார் - தமிழ்ப்
பார்த்திவர் கின்ற தமிழ்நாடு
சீனம் மிசிரம் யவன ரகம் - இன்னும்
தேசம் பலவும் புகழ் வீசிக் - கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும் மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு
செந்தமிழ் நாடேனும் போதினிலே” (20)

என்று தமிழின் பரப்பை விரித்துக் காட்டியுள்ளார். சேக்கிழாரும் பாரதியாரும் தமிழ் வெறியர்களா?

ஞானப்பிரகாச அடிகளார் (Rev. S. Gnana Prakasar, 0. M. 1) என்னும் இலங்கைப் பேரறிஞர், ‘சொற்பிறப்பு - ஒப்பியல் தமிழ் அகராதி’ (An Etymological and comparative Lexicon of the Tamil Language) என்னும் தமது