பக்கம்:மீண்டும் சிருங்கேரி சென்றேன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9


1. மதத்தின் ஜீவகாடி

சிருங்கேரி செல்லும் வழியிலே கண்ட இயற்கைக் காட்சிகளை ஆங்காங்கே விவரித்திருப்பினும் இது ஒரு பிரயாணக் கதை அன்று. சரித்திரமும் அன்று. ஏனெ னில் நான் சரித்திரத்திலே நம்பிக்கை இல்லாதவன். சரித்திரம் என்பது என்ன ? வாழ்வின் கதை. வாழ்வாவது மாயம். மாயத்தைப் பற்றி எழுத வேண்டுமா ? உண்மையையல்லவா எழுத வேண்டும்? இந்திய ரிஷிகள் இந்த உண்மையை உரைத்திருக்கிறார்கள். மறைமுகமாகவும் சொல்லியிருக்கிறார்கள்; வெளிப்படையாகவும் சொல்லியிருக்கிறார்கள். நமது இலக்கியப் பொக்கிஷங்களிலே அவற்றைக் காணலாம். இந்த பொக்கிஷத்தை மேற்கு நாட்டுச் சிந்தனையாளர்கள் இன்னும் கண்டு கொண்டபாடில்லை. கண்டு கொண்டால் உலகத்தின் சிந்தனையிலே புதிய நோக்குண்டாகும்.

ஒரு காலத்திலே ரைன் நதிப் பிரதேசம் உயர்ந்த லட்சியக் கனவு காணும் பகுதியாக விளங்கியது. இதற்குக் காரணம் என்ன ? இந்தியாவின் சிந்தனைகள் தொலைநூரத்தில் உள்ள ஜெர்மனியை எட்டியதுதான். எப்படி எட்டியது? பாரசீகம், அலெக்சாண்ட்ரியா, கர்தோவா, படுவா, பாரிஸ் வழியாக ரைன் பகுதி சென்றது. இதை மேற்கு நாட்டு அறிஞர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.

கி. மு 428 - 347ல் கிரீஸ் தேசத்திலே ஓர் அறிஞர் வாழ்ந்தார். அவர் பெயர் பிளாட்டோ என்பது. இவர்