பக்கம்:மீண்டும் சிருங்கேரி சென்றேன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

கள் பூஜித்தால் அவை மேலும் தெய்வ சாந்நித்யம் பெற்று விளங்கும்.

ஒருவன் தனது மனோ நிலையை நன்கு அறிந்து அதற்கேற்பத் தன் இஷ்ட தேவதையைத் தெரிந்து கொள்ள வேண்டும். இஷ்ட தேவதா உபாசனை என்ன செய்யும்? ஆன்மிக வழியில் ஏற்படும் இடையூறுகளை நீக்கும் வழி காட்டும். சேஷத்திராடனம் செய்வது எதற்கெனில் மன அமைதி பெறுவதற்கே. தீர்த்தச் சிறப்பும், மூர்த்திச் சிறப்பும் பெற்ற கேஷத்திரங்களுக்கு விஜயம் செய்யும்போது அந்தத் தீர்த்தமும் மூர்த்தியும் ஆன்மிக உணர்வைத் தட்டி எழுப்பி மன அமைதி கொடுக்கும்.

இப்படியாக ஒவ்வொரு விதத்தில் மூர்த்திச் சிறப்பும் பெற்று விளங்குகின்றன. ஆனால் சிருங்கேரியிலோ எல்லா மூர்த்திகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. சிருங்கேரி சென்றால் எல்லா மூர்த்திகளையும் தரிசனம் செய்யலாம்.

இதர சேஷத்திரங்களிலே என்ன காணலாம் ? பஞ்ச பூதங்களில் ஏதேனும் ஒன்றே சிறப்புற்று விளங்கக் காணலாம். ஆனால் சிருங்கேரியிலோ அந்தப் பஞ்ச பூதங்களும் சிறப்புற்று விளங்குகின்றன.

சங்கர பகவத் பாதர் மலைப் பாறையிலே ஸ்ரீ சக்ரம் வடித்தார். அதன்மீது சந்தன மரத்தால் செய்யப்பட்ட சாரதாதேவி வடிவத்தைப் பிரதிஷ்டை செய்தார். இந்த சாரதாதேவி ஆலயம், சாரதா பீடம் எவ்வளவு பழைமையானதோ அவ்வளவு மழமையானது ஆகும். இந்த தேவியின் ஆலயம் மரத்தால் ஆனது. இந்த நூற்றாண்-